தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?

PM Modi Asked Not To Buy Gold | இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆண்டுக்கு நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறியுள்ளது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?

இந்திய பிரதமர் மோடி

Updated On: 

11 May 2026 15:55 PM

 IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இந்திய மக்களை ஒரு ஆண்டுக்கு தங்கம் (Gold) வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தங்கம் வாங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளது ஏன், அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் – பிரதமர் முக்கிய அட்வைஸ்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது, திருமணங்களுக்காக தங்கம் வாங்க வேண்டாம், தேசநலன் கருதி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், வீட்டில் இருந்து பணி செய்யும் நடைமுறையை நாம் தொடர்வது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்திருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!

தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் சொன்னதன் காரணம் என்ன?

மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடும் உச்சத்தில் உள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டு வெறும் 75 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், தற்போது 110 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா தனது எண்ணெய் தேவையை வெளிநாடுகளின் மூலமே இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய டாலர்களில் பணம் செலுத்த வேண்டியது உள்ளது.

இதையும் படிங்க : இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இதேபோல தங்கத்தின் தேவையையும் இந்தியா இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வருகிறது. உலக அளவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெயை போலவே தங்கத்தையும் இந்தியா டாலர்கள் மதிப்பில் இறக்குமதி செய்து வரும் நிலையில், கூடுதல் அமெரிக்க டாலர்களில் பணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக தான் இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டுவர எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டவே அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி