தீபாவளிக்கு அறிமுகமாகும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி? வெளியான ஹேப்பி நியூஸ்!

EPFO Alert: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தொழிலாளர்கள் பணம் எடுக்க ஏதுவாக இபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி தீபாவளிக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு அறிமுகமாகும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி? வெளியான ஹேப்பி நியூஸ்!

மாதிரி புகைப்படம்

Published: 

12 Sep 2025 18:46 PM

 IST

தொழிலாளர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கை மிகவும் சுலபமாக கையாளும் வகையில் பல புதிய நடைமுறைகளை இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மேற்றொள்ளவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM) மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. செப்டம்பர் 2025 மாதமே அறிமுகமாகவிருந்த இந்த வசதி தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக ஏஎடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகள் போன்ற எளிமையான பரிவர்த்தனையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவிருக்கிறது.

தீபாவளி முதல் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி?

மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சூக் மண்ட்வியா தலைமையில் அக்டோபர் 10 மற்றும் 11, 2025 ஆகிய தேதிகளில் இபிஎஃப்ஓ நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 8 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அறிவிப்பது தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக அரசு தீவிரம் காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி நிறுத்தப்பட்டுள்ளதா? காரணம் இதுதான்!

இந்தக் கூட்டத்தில் இபிஎஃப்ஓ 3.0 எனப்படும் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக பிஎஃப் தொகையை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி, யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை பயன்படுத்தும் வசி போன்ற வங்கி சேவைகள் மாதிரியான வசதிகள் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளன.   மேலும் தற்போது மாதம் ரூ.1000 ஆக உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்தும் திட்டமும் விவாதிக்கப்படவுள்ளது. இது தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ஆனால் பிஎஃப் தொகையை வங்கி மூலம் எளிதில் எடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவது பிஎஃப் திட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் என தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. பிஎஃப் என்பது பணியாளர்கள் தங்களின் ஓய்வு காலத்திலும் அவசர தேவைகளின் போதும் எடுத்து பயன்படுத்தும் ஒரு திட்டமாகும். இதனை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம் என எளிமைப்படுத்துவது சேமிப்பு என்பதே இருக்காது எனவும் பிஎஃப் திட்டத்தின் அடிப்படை நோக்கமே பாதிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றன.

 இதையும் படிக்க : சிறு வணிகர்கள் ரூ.90,000 வரை கடன் பெறலாம் – மத்திய அரசின் திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

தற்போதைய விதிகளின் படி பிஎஃப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் மருத்துவம், கல்வி, திருமணம், வீடு வாங்குதல் போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ரூ. 5 லட்சம் வரை இணையதளம் மூலமாக தானியங்கு முறையில் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் இந்த முறையில் பணம் நம் கைகளில் கிடைக்க 2, 3 நாட்கள் தேவைப்படும். புதிய ஏடிஎம் சேவை மூலம் பணத்தை மிக எளிதாகவும் வேகமாகவும் எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.