72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்.. FASTag புதிய ரூல்ஸ்!
New Rules Introduced In FASTag | இந்திய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டாக் முறை அமலில் உள்ளது. இந்த நிலையில், 72 மணி நேரத்திற்குள் சுங்க கட்டணம் செலுத்தவில்லை என்றால் அபராதத்துடம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை கடந்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் (Toll Gate Fee) விதிக்கப்படும். இந்த சுங்க கட்டணத்தை செலுத்த முன்பு பணம் செலுத்தப்பட்டு வந்தது. அதற்கு பிறகு பணம் செலுத்தும் நேரத்தை விரைவானதாக மாற்றம் செய்ய, ஃபாஸ்டாக் (FASTag) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்தை பயன்படுத்தி நொடி பொழுதில் சுங்க கட்டணம் செலுத்த முடியும். இந்த நிலையில், ஃபாஸ்டாக் மூலம் சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான புதிய விதி ஒன்று அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கட்டணத்தை விரைவாக செலுத்த சுங்கச்சாவடிகளில் உள்ள ஃபாஸ்டாக் முறை
முன்பெல்லாம் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் கையில் பணத்தை கொடுத்து கட்டணத்தை செலுத்திய, பிறகு அதற்கான மீத தொகையை பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இந்த முறைக்கு அதிக நேரம் தேவைப்பட்ட காரணத்தால் அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஃபாஸ்டாக் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் பயனர்கள் மிக விரைவாக நொடி பொழுதில் சுங்க கட்டணம் செலுத்த முடியும்.
இதையும் படிங்க : டவுன்லோடு செய்த இ-ஆதார் கார்டு செல்லுபடியாகுமா? மத்திய அரசு விளக்கம்
72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் முறை அமலுக்கு வந்ததும் பெரும்பாலான பொதுமக்கள் ஃபாஸ்டக்கையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் முறை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையில், இனி சுங்கச்சாவடிகளில் பணம் வாங்கப்படமாட்டாது. ஃபாஸ்டாக் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் ஜிபேயில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது அந்த முறை தான் நடைமுறையில் உள்ளது.
இதையும் படிங்க : 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சுங்கச்சாவடிகளை கடந்துச் செல்லும் வாகனங்கள் ஃபாஸ்டாக் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் அது தொடர்பாக அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர் அந்த தொகையை செலுத்த வேண்டும். ஒருவேளை வாகன உரிமையாளர் 72 மணி நேரம் ஆகியும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, அபராதத்துடன் கூடிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.