வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வந்த பெரிய நிம்மதி.. புதிய வாடகை விதிகளை அறிமுகம் செய்த மத்திய அரசு!
New Rent Rules India 2025 | இந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், புதிய வாடகை விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீட்டில் இருப்பவர்களை விடவும் வாடகை வீட்டில் (Rental House) இருப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக சென்னை (Chennai), பெங்களூரு (Bengaluru), மும்பை (Mumbai) உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாடகை வீடுகள் கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர். காரணம் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வேலை வாய்ப்பை தேடி ஏராளமான மக்கள் தங்களது சொந்த உர்களை விட்டு விட்டு வருகின்றனர். அவர்களுக்கு விடுதிகளும், வாடகை வீடுகளும் தான் வாழ்வாதாரமாக உள்ளது. இவ்வாறு பெரிய நகரங்களில் வாடகை வீடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், புதிய வாடகை விதிகளை (New Renting Rules) அரசு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய வாடகை விதிகளை அறிமுகம் செய்துள்ள அரசு
மத்திய அரசு (Central Government) புதிய வாடகை விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடகை வீடுகளுக்கு வழங்க வேண்டிய அட்வான்ஸ் (Advance) மற்றும் வாடகை (Rent) தொகை குறையும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு இந்த புதிய விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், வீடு வாடகை விடுவதில் ஏற்படும் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களை குறைத்து வீடு வாடகை விடும் நபர் மற்றும் வாடகைக்கு செல்லும் நபர் ஆகிய இருவரையும் பாதுகாக்க இந்த விதிகள் உதவும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ஆர்பிஐ?.. எகிறும் நாணய கொள்கை குழு கூட்ட எதிர்ப்பார்ப்பு!
வாடகை ஒப்பந்தங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும்
வீடு வாடகைக்கு விடப்படும் பட்சத்தில் வாடகைக்கு செல்லும் நபர் மற்றும் வாடகைக்கு விடும் நபர் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பெரும்பாலானவர்கள் இந்த ஒப்பந்தத்தை கூட முறையாக போடுவதில்லை. இந்த நிலையில் தான் வீடு வாடகைக்கு விடப்படும் பட்சத்தில், வாடகை ஒப்பந்த (Rental Agreement) அடுத்த 60 நாட்களுக்குள்ளாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவ்வாறு 60 நாட்களுக்குள் வாடகை ஒப்பந்தம் ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அதற்கு ரூ.5,000 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அதிரடியாக விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்!
இனி அட்வான்ஸ் தொகை இவ்வளவு தன் வாங்க வேண்டும்
வீடு வாடகைக்கு செல்லும்போது அட்வான்ஸ் செலுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம் வாடகைக்கு செல்லும் நபரால் வாடகையை முறையாக செலுத்த முடியவில்லை என்றாலோ, அல்லது வீடு காலி செய்யும் போது எதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தாலோ அந்த அட்வான்ஸ் தொகையில் இருந்து பிடித்தம் செய்துக்கொள்வதற்காக வாங்கப்படுகிறது. அவ்வாறு அட்வான்ஸ் தொகை வாங்குவதற்கான வரம்பு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் அதிகப்படியான பணத்தை வாங்கி வந்தனர். இதற்கு அரசு தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதாவது, இனி இரண்டு மாதத்திற்கான வாடகையை மட்டுமே வீட்டின் உரிமையாளர்கள் அட்வான்ஸாக வாங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுவே வணிக வளாகம் என்றால் 6 மாதத்திற்கான வாடகையை அட்வான்ஸாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!
வாடகை உயர்த்துவதில் வந்த புதிய நடைமுறை
பொதுவாக வீட்டின் உரிமையாளர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து வீட்டின் வாடகையை உயர்த்துவர். அவ்வாறு வாடகை உயர்த்தும் உரிமையாளர்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென வாடகை உயர்த்தப்படுவதாக தெரிவிப்பர். இதனால், வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் தான் அரசு இதில் முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது உரிமையாளர்கள் 12 மாதங்களுக்கு பிறகே வீட்டு வாடகையை உயர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு வீட்டு வாடகையை உயர்த்தும் பட்சத்தில் அது குறித்து 90 நாட்களுக்கு முன்பாகவே வாடகைக்கு இருக்கும் நபருக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவையெல்லாம் இனி தண்டனைக்குரிய குற்றங்கள்
உரிமையாளர் வாடகைக்கு இருக்கும் நபர் வெளியேற வேண்டும் என நினைத்தால் அது குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வீட்டை பூட்டுவது, மின்சாரத்தை துண்டிப்பது, தண்ணீர் இணைப்பை துண்டிப்பது ஆகியவை இனி தண்டனைக்குறிய குற்றங்களாக கருதப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. பெரு நகரங்களில் வாடகை வீடுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்திக்கொள்ளும் வீட்டின் உரிமையாளர்கள் அதிக அட்வான்ஸ் வாங்குவது, முன் அறிவிப்பு எதுவுமின்றி வீட்டை காலி செய்ய கூறுவது, வாடகை தொகையை அதிகரிப்பது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு இந்த முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.