15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

New Ration Card in 15 Days | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Jun 2025 15:56 PM

 IST

உணவுத் துறை மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு (Ration Card) விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல தேவைகளுக்கு ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் புதிய ரேஷ அட்டைக்காக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கு ரேஷன் கார்டு

இந்தியாவை பொருத்தவரை ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. தனி நபர்களுக்கு எப்படி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை முக்கியமானதாக உள்ளதோ அதேபோல குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

காரணம் ரேஷன் கார்டுகள் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு மாநிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படும். இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இது தவிர மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் திட்டங்களில் பயன்பெறுவதற்கும் கூட ரேஷ கார்டு கட்டாயமாக உள்ளது.

வெறும் 15 நாட்களில் ரேஷன் கார்டு – அமைச்சர் சக்கரபாணி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயனபெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள்  ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், விரைவில் பொதுமக்களுக்கு ரேஷர் கார்டுகளை வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உணவுத் துறை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகளை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?