July 2025 Changes : பான் கார்டு முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு வரை.. ஜூலை முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!
July 2025 Important Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில், 2025 ஜூலை மாதத்திலும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), கிரெடிட் கார்டு (Credit Card) உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் 2025 ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் 2025 ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2025 ஜூலை மாதத்திலும், பான் கார்டு, தட்கல் டிக்கெட் முன்பதிவு (Tatkal Ticket Pre Booking), கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஜூலை மாதத்தில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 ஜூலை மாதத்தில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைப்பதால் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், 2025 ஜூலை மாதத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம்
ஜூலை 1, 2025 முதல் பான் கார்டு (PAN Card – Permanent Account Number) பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. சிபிடிடி-ன் (CBDT – Central Board of Direct Taxes) புதிய விதிகளின்படி, பான் கார்டு வாங்க விரும்பும் நபர்கள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பான் கார்டுக்கு ஆதார் வெரிஃபிகேஷனும் (Aadhaar Verification) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




தட்கட் டிக்கெட் முன்பதிவு
ஜூலை 1, 2025 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ஆதார் கார்டை இந்திய ரயில்வே (Indian Railway) கட்டாயமாக மாற்றியுள்ளது. ஐஆர்சிடிடியின் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 15, 2025 முதல் ஆன்லைனில் தட்கல் ட்டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல்
2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி (Income Tax) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2025 ஆக இருந்தது. இந்த நிலையில், சிபிடிடி அதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.