இன்ஸ்டண்ட் பண பரிமாற்றம்.. ஆண்ட்ராய்டு, ஆப்பிளில் உள்ள பேமெண்ட் செயலிகள்.. லிஸ்ட் இதோ!
List Of Important Payment Apps | தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் மிக விரைவானதாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் உள்ள பண பரிமாற்ற செயலிகள் எவை, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் ஏதெனும் ஒரு சேவையை பெற வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து அந்த பணிகளை முடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால், தற்போது அதற்கான அவசியம் இல்லை. ஆன்லைன் செயலிகள் மூலம் மிக விரைவாக செய்து முடித்துவிடலாம். அந்த வகையில் பண பரிமாற்றமும் மிக விரைவானதாக மாறிவிட்டது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (Apple) ஐபோன்களில் இருக்கும் பண பரிமாற்ற செயலிகள் (Money Transaction Apps) என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் பே
ஆப்பிள் பயனர்களுக்கான பிரத்யேக பண பரிமாற்ற செயலி தான் இந்த ஆப்பிள் பே (Apple Pay). இது மிகவும் பாதுகாப்பான பண பரிமாற்ற செயலியாக உள்ளது. பயனர்கள் பயணங்களின் போதும் கூட எளிதாக சேவைகளை பயன்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம்,வாட்சிலும் இந்த அம்சத்தை வழங்குகிறது.
கூகுள் பே
இந்தியாவை பொருத்தவரை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற செயலி என்றால் அது கூகுள் பே தான் (Google Pay). இந்த செயலி பாதுகாப்பான சேவையை வழங்குவது மட்டுமன்றி பயன்படுத்துவதற்கும் மிக எளிதானதாக உள்ளது. ஒருவர் அந்த மாதத்தில் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதை தெரிந்துக்கொள்வது சிறப்பு ஆஃபர்கள் என பல அட்டகாசமான அம்சங்களை இந்த செயலியில் பெறலாம்.
இதையும் படிங்க : வைப்பு நிதி முதல் சுகன்யா சம்ரிதி திட்டம் வரை… – சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்? – வெளியான தகவல்
பேபால்
வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய இந்த பேபால் (PayPal) செயலி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியில், பயனர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதால் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.
பேடிஎம்
இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலி தான் இந்த பேடிஎம் (Paytm). இந்த செயலியை பயன்படுத்தி பணம் அனுப்புவது, ரீச்சார்ஜ், கட்டணங்கள் செலுத்துவது என பல்வேறு விஷயங்களை செய்யலாம். இந்த நிறுவனம், தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகள் FD திட்டங்கள்.. 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
போன்பே
அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செய்லிகள் பட்டியலில் போன்பே (Phone Pay) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த செயலியில் யுபிஐ சேவைகள், தங்க முதலீடு, இன்சூரன்ஸ் என அனைத்து விதமான அம்சங்களும் வழங்கப்படுகிறது. ஸ்கிராட்ச் கார்டு ரிவார்டு, போனஸ் பாயிண்ட்ஸ் என கூடுதல் அம்சங்களும் இதில் கிடைக்கிறது.