தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
Important Aspect Of Getting Gold Loan | இந்தியாவில் பலரும் தங்க நகைகளை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இந்த நிலையில், தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.

மாதிரி புகைப்படம்
இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தில் தங்கம் (Gold) முக்கிய பங்கு வகிக்கிறது. கலாச்சாரத்தில் மட்டுமன்றி இந்தியர்களின் சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டிலும் (Investment) முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தை முதலீடாக கருதுகின்றனர். அதன் காரணமாக தங்கத்தை வாங்கி வைத்துவிட்டு தங்களுக்கு தேவை ஏற்படும்போது அந்த தங்கத்தை அடகு வைத்து கடன் பெற்றோ அல்லது விற்பனை செய்தோ தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கடன் பெறுவது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கலாமா?
தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் வட்டி விகிதம். காரணம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என ஒவ்வொன்றிலும் தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மாறுபடும். உதாரணமாக இந்தியாவில் தங்க நகைக் கடன்களுக்கு 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. சில வங்கி சாராத நிறுவனங்கள் 20 முதல் 27 சதவீதம் வரையும் வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், குறைந்த வட்டி விகிதம் கொண்ட தங்க நகைக் கடன் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
இதையும் படிங்க : இரவோடு இரவாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு
எனவே நீங்கள் தங்க நகைகளை அடகு வைப்பதற்கு முன்னதாக எந்த வங்கி குறைந்த விலையில் தங்க நகை கடன்களுக்கான வட்டி வழங்குகிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
தங்க நகைக் கடனுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- பஞ்சாப் நேஷனல் வங்கி 9.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- ஹெச்டிஎஃப்சி வங்கி 9.10 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
- முத்தூட் ஃபைனான்ஸ் வங்கி 10.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?
வட்டி அதிகம் உள்ள வங்கிகளில் நகை அடகு வைத்து கடன் வாங்கும் பட்சத்தில் அதிக தொகையை திருப்பி செலுத்த வேண்டும். எனவே குறைந்த வட்டியுள்ள வங்கிகளில் தங்க நகைக் கடன் வாங்குவது லாபகரமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.