Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்.. ஏன்?

Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்.. ஏன்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Jun 2025 09:05 AM

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minster MK Stalin) சட்டப்பேரவையில் அறிவித்தபடி, முகாம்கள் அமைக்கப்பட்டு மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கு பணிகள் நடைபெற்று வந்தாலும், தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியமா, என்ன என்ன சான்றுகள் அவசியம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைப் பகுதி திட்டத்தை திமுக அரசு தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 16 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமை தொகுப்பு திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததை போலவே தமிழகத்தில் முகாம்கள் தொடங்கப்பட்டு புதிய பயனர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் கட்டாயமாக உள்ளது. காரணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பொருத்தவரை குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி, வருமான வரி தாக்கல் செய்பவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துபவர்கள் ஆகியோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது.

எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் இலக்காக உள்ள நிலையில், அதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகிறது குறிப்பிடத்தக்கது.