கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடையை இழந்த முதலீட்டாளர்கள்!

Investors Lost 15 Lakh Crore Rupees In Indian Share Market | கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்செக்ஸ் 1800 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 600 புள்ளிகள் சரிந்துள்ளது.

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடையை இழந்த முதலீட்டாளர்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

23 Mar 2026 19:40 PM

 IST

மும்பை, மார்ச் 23 : ஈரான் போர் (Iran War) காரணமாக இந்திய பங்குச்சந்தை (Indian Share Market) கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 23, 2026) மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE – Bombay Stock Exchange) சென்செக்ஸ் 1,836 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி (Nifty) 50 601.85 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தை

பிப்ரவரி 28, 2026 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் போர் தொடங்கியது முதலே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!

கடுமையான சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

இன்று மதியம் 3 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 1,836 புள்ளிகள் சரிந்து 72,696.39 புள்ளிகளுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, நிஃப்டி 50 601.85 புள்ளிகள் சரிவை சந்தித்து 22,512.65 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச்சந்தை இத்தகைய கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.5 லட்சம் வரை ஈஸியா பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. EPFO 3.0-ன் முக்கிய அம்சம்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார். ஆனால், ஈரானோ அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்குமோ என்ற அச்சம் உருவகியுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று கடுமையாக சரிந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..