திருமணமாகவில்லை… குழந்தை இல்லை… இன்சூரன்ஸை விரும்பாத GenZ இளைஞர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Gen Z Financial Choices : திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும் Gen Z இளைஞர்கள் தாமதம் செய்வதால் அவர்களுக்கு காப்பீடு பெறுவதில் ஆர்வம் இல்லை என சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக திருமணமானதும் தான் இளைஞர்களுக்கு காப்பீடு குறித்து எண்ணம் வரும். நமக்கு பின்னால் நம் குடும்பம் என்னவாகும் என்ற எண்ணமே அதற்கு காரணம். ஆனால் இன்றைய ஜென் சி எனப்படும் 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த வழக்கத்துக்கு மாறாக செயல்படுகின்றனர். பொதுவாக அவர் திருமணம் மற்றும் குழந்தை பெறுதல் போன்ற விஷயங்ளை தள்ளிப்போட்டு வருகின்றனர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என பலரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் காப்பீடு பெறும் மனப்பான்மை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் வேர்ல்ட் லைஃப் இன்சூரன்ஸ் ரிப்போர்ட் வெளியிட்ட ஆய்வின் படி 40 வயதிற்குட்பட்டவர்கள் இன்சூரன்ஸின் அவசியம் புரிந்தாலும், 68 சதவிகிதம் பேர் இன்சூரன்ஸ் வாங்காமல் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் பலரும் தாமதமாக திருமணம் செய்துகொள்வது, குழந்தை பெறுதலை தள்ளி வைப்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
காரணங்கள் என்ன?
ஆய்வில் பங்கேற்ற இளம் வயதினரின் கருத்துப்படி, 32 சதவிகிதம் பேர் காப்பீடு பெறும் அளவுக்கு வாழ்க்கை அமையவில்லை என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் 28 சதவிகிதம் பேர் பிரீமியம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. மேலும் 25 சதவிகிதம் பேர் உடனடி படன் கிடைக்காது என்பதால் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர். இதனால் இளைஞர்களிடையே இன்சூரன்ஸ் பெறும் ஆர்வம் குறைந்திருக்கிறது.




இதையும் படிக்க : இந்த காரணங்களுக்காக லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்! தவிர்ப்பது எப்படி?
18 நாடுகளில் இருந்து 18 முதல் 39 வயதுக்குட்பட்ட 6,176 பேரிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 63 சதவிகிதம் பேர் உடனடியா திருமணத்தை திட்டமிடவில்லை என தெரிவித்திருக்கின்றனர். மேலும் 84 சதவிகிதம் பேர் குழந்தை பெறும் திட்டமில்லை என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். இந்த காரணங்களால் தங்களுக்கு இன்சூரன்ஸ் தேவையில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கின்றனர்.
புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள்
இன்றைய இளைஞர்கள் உயிருடன் இருக்கும்போதே கிடைக்கும் நன்மைகளை எதிர்பார்க்கிறார்கள் அதாவது, திடீர் செலவுகளுக்கு தேவைப்படும் கடன், ரிவார்டுகள், ஃபேமிலி கவர், வேலையை மாற்றினாலும் தொடரும் இன்சூரன்ஸ் என அவர்கள் தேவை வேறு மாதிரி இருக்கிறது. இப்போது 44 சதவிகிதம் பணியாளர்கள் போர்டபுள் இன்சூரன்ஸை விரும்புகின்றனர். ஆனால் 19 சதவிகிதம் காப்பீட்டு நிறுவனங்களை இதனை வழங்குகின்றன.
இதையும் படிக்க : இஎம்ஐ செலுத்தவில்லையா? உங்கள் போன் லாக் செய்யப்படலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்
எதிர்காலத்தில் காப்பீடு நிறுவனங்கள் செய்ய வேண்டிய மாற்றம்
- ஆய்வில் எதிர்காலத்தில் காப்பீடு நிறுவங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- உடனடி பலனளிக்க கூடிய காப்பீடுகள்
- ஏஐ சார்ந்த தனிப்பட்ட ஆலோசனைகள்
- வங்கிகள், லைஃப்ஸ்டைல் பிளாட்ஃபார்ம்களுடன் இணைந்து காப்பீடு வழங்குதல்