Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ITR Filing : இன்று ஒருநாள் மட்டும் தான்.. வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

2024-25 ITR Filing Deadline | 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

ITR Filing : இன்று ஒருநாள் மட்டும் தான்.. வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Sep 2025 11:19 AM IST

சென்னை, செப்டம்பர் 16 : 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 15, 2025 அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை (Income Tax Department) மீண்டும் நீட்டித்துள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16, 2025) ஒரு நாள் மட்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள், அபராத கட்டணத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்பு குறித்து வருமான வரித்துறை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி தேதி

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 30, 2025 கடைசி தேதியாக வருமான வரித்துறை அறிவித்தது. ஆனால் அந்த தேதிக்குள் பெரும்பாலானவர்கள் வரி செலுத்தாமல் இருந்த நிலையில், செப்டம்பர் 15, 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30, 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்த வருமான வரித்துறை செப்டம்பர் 15, 2025 தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதை உறுதி செய்தது.

இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு?.. வருமான வரித்துறை திட்டவட்ட மறுப்பு!

வருமான வரி தாக்கல் – இன்று ஒரு நாள் காலக்கெடு நீட்டிப்பு

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 15, 2025) இரவு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட வருமான வரித்துறை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக கூறியுள்ளது. அதாவது நேற்றோடு (செப்டம்பர் 15, 2025) முடிவடைய இருந்த காலக்கெடுவை இன்று (செப்டம்பர் 16, 2025) ஒரு நாள் மட்டும் நீட்டித்துள்ளது. இதற்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.