ரூ. 5,000-ல் SIP தொடங்கினால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி பெறலாம்.. சிம்பிள் ஃபார்முலா!
Get 1 Crore Rupees In SIP | பெரும்பாலான நபர்கள் எஸ்ஐபியில் அதிக அளவில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானத்தை பெற முடியும் என நினைக்கின்றனர். ஆனால், மாதம் ரூ.5,000 என்ற அடிப்படையில் முதலீடு தொடங்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வரை சேமிக்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களுக்கு பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. காரணம், பாதுகாப்பான பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை பாதுகாக்கவும், அதனை கட்டமைக்கவும் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய நினைக்கின்றனர். அவ்வாறு சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் எஸ்ஐபியில் அதிக பணத்தை தான் முதலீடு செய்ய முடியும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி அல்ல, மாதம் ரூ.5,000 முதலீடு என்ற அடிப்படையிலும் எஸ்ஐபி தொடங்கலாம். அவ்வாறு மாதம் ரூ.5,000 எஸ்ஐபிக்கு செலுத்தும் பட்சத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி எட்ட முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஸ்ஐபியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் இந்தியர்கள்
கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபியில் முதலீடு செய்ய இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
- 2022 ஆம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 5.2 கோடி எஸ்ஐபி கணக்குகளை கொண்டு இருந்தது.
- 2023 ஆம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 6.3 கோடி எஸ்ஐபி கணக்குகளை கொண்டு இருந்தது.
- 2024 ஆம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 8.4 கோடி எஸ்ஐபி கணக்குகளை கொண்டு இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் எஸ்ஐபி முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 2025 மார்ச் மாதம் 8.11 கோடியாக இருந்த எஸ்ஐபி கணக்குகள் அக்டோபர் மாதத்தில் 9.45 கோடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : இனி தங்கத்தை போல வெள்ளியையும் அடகு வைத்து கடன் வாங்கலாம்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
ரூ.5,000-த்தை எஸ்ஐபிகளில் பிரித்து முதலீடு செய்வது எப்படி?
ஒருவர் எஸ்ஐபியில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அந்த நபர் இண்டக்ஸ் ஃபண்டில் (Index Fund) ரூ.5,000 மற்றும் ப்ளெக்ஸி கேப்பில் (Flexi Cap) ரூ.2,000 முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எஸ்ஐபியில் புதியதாக முதலீடு செய்ய தொடங்கும் நபர்கள் இத்தகைய முறையை பின்பற்றி முதலீடு செய்வது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் எனவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு EMI உண்மையிலே பயனுள்ளதா?.. அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்ன?
ரூ.5,000 முதலீட்டில் ரூ.1 கோடி பெறுவது எப்படி?
ஒருவர் ரூ.5,000 உடன் தொடங்கி 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி பணம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் எஸ்ஐபியில் முதலீடு செய்கிறார் என்றால், அந்த நபர் வருடத்திற்கு 10 சதவீதம் தங்களது மாத தவணையில் அதிகரிக்க வேண்டும். அதாவது ரூ.5,000 முதலீடு செய்தால் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.5,500 ஆக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக 12 சதவீதம் லாபம் பெறும் பட்சத்தில் முதலீடு மிக விரைவாக வளரும்.
இந்த முறையை பின்பற்றி 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் ரூ.20 கோடி என்ற இலக்கை மிக சுலபமாக அடைந்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.