உங்களுக்கே தெரியாமல் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கலாம்.. கவனமாக இருப்பது எப்படி?

How To Beware Of PAN Card Scam | பான் கார்டு மூலம் ஏராளமான மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், பான் கார்டு மோசடி மற்றும் முறைகேடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கலாம்.. கவனமாக இருப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Feb 2026 12:23 PM

 IST

இந்தியாவில் 18 வயது நிரம்பிய தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் பான் கார்டு (PAN Card) வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த பான் கார்டு ஒருவரின் நிதி பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்ய உதவுவதுடன், நிதி முறைகேடுகளையும் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு முக்கியமான ஆவணமாக பான் கார்டு இருந்தாலும் அதன் தகவல்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், பான் கார்டு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பர்க்கலாம்.

தவறாக பயன்படுத்தப்படும் பான் கார்டு

நிதி சார்ந்த சேவைகள் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு பல இடங்களில் நாம் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு பான் கார்டு சமர்ப்பிக்கப்படும்போது அதில் இருக்கும் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக பான் எண் திருடப்பட்டு, அந்த எண்ணை வைத்திருக்கும் நபருக்கே தெரியாமல் அவர் மீது கடன் வாங்க கூடிய அபாயமும் உள்ளது. இந்த நிலையில், பான் கார்டில் ஏதேனும் மோசடிகள் நடைபெறுகிறதா என்பதை அவ்வப்போது சோதனை செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இதையும் படிங்க : ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்து விட்டீர்களா.. உடனே செக் பண்ணுங்க.. முக்கிய தகவல்!

கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும்

கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது சோதனை செய்வதன் மூலம் உங்களது பான் கார்டை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒவ்வொரு கடனும் உங்களது கிரெடிட் வரலாற்றில் இருக்கும். தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, மைரோ லோன் ஆகியவற்றின் தரவுகளி, கிரெடிட் ஸ்கோரில் தெளிவாக இடம்பெற்றிருக்கும். CIBIL, Experian, Equifax உள்ளிட்ட நிறுவனங்கள் இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் வழங்குகின்றன. அதன் மூலம் கடன் விவரங்களை மிக எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : பிஎம் கிசான் 22வது தவணை.. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரப்போவது எப்போது?

இவ்வாறு அவ்வப்போது கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்டை சோதனை செய்யும் பட்சத்தில் உங்களது பெயரில் யாரேனும் கடன் வாங்கியுள்ளார்களா அல்லது உங்களது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..