தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். அதில் ரூ.4 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Nov 2025 16:21 PM

 IST

பாதுகாப்பான முதலீடு மற்றும் லாபத்திற்கு சிறந்ததாக உள்ளது தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) தான். இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையில், ஏராளமான பொதுக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக நிதி இழக்கும் அபாயத்தை தவிர்க்க விரும்பும் பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS – Monthly Income Scheme) ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்

தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையு படிங்க : நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினால் அபராதம் விதிக்கும் ஐடி?.. இது தான் காரணம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ரூ.4 லட்சத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

இந்த தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய தொடங்கலாம். இதேபோல அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதுதவிர கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : நகை கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவதில் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

லாபம் மட்டுமே ரூ.1,48,020 கிடைக்கும்

இந்த நிலையில், இந்த 5 ஆண்டுகளுக்கான தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் நீங்கள் ரூ.4 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், மாதம் மாதம் வட்டியாக மட்டுமே உங்களுக்கு ரூ.2,476 கிடைக்கும். இந்த நிலையில், 5 ஆண்டுகளில் மொத்தமாக வட்டியாக மட்மே ரூ.1,48,020 கிடைக்கும். எனவே 5 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.4 லட்சம், அதன் வட்டி ரூ.1,48,020 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.5,48,020 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.