2050 ஆம் ஆண்டு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 5 சிறந்த பாதுகாப்பான முதலீட்டு வழிகள் இதோ
Inflation Impact Alert : பணவீக்கத்தின் அடிப்படையில் இன்று இருக்கும் ரூபாயின் மதிப்பு கொண்டே இருக்கும். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் பலரும் முதலீட்டில் தவறு செய்கிறார்கள். இந்த கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இன்று நம்மில் பலரும் ரூ.1 கோடி இருந்தால் போதும் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என நினைப்போம். குறிப்பாக வீடு கட்டலாம், நம் நினைத்தபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என நினைப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவுகள் இருக்கும். ஆனால் இந்த ரூ.1 கோடி, 25 ஆண்டுகள் கழித்து, சரியாக 2050 ஆம் ஆண்டு அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என யோசித்து பார்த்திருக்கிறார்களா? பணவீக்கம் (Inflation) காரணமாக நம் பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வரும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு டீயின் விலை 2.50 தான் இருந்திருக்கும். ஆனால் இன்று அதே டீயின் (Tea) விலை 12 முதல் 15 ரூபாய் வரை விற்கிறது. இன்று அதே ரூ.2.50 சாக்லெட் தவிர ஒன்றும் வாங்க முடியாது. அதன் படி 25 ஆண்டுகள் கழித்து 1 கோடி ரூபாயின் மதிப்பு இன்று இருப்பது போல இருக்காது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதற்கு காரணமாக இருப்பது பணவீக்கம். பணவீக்கம் காலப்போக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வதைக் குறிக்கும். இதனால் பணத்தின் வாங்கும் திறன்குறைகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் பணவீக்கம் சராசரியாக 6 சதவிகிதமாக இருந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும்போது, 2025 ஆம் ஆண்டு ரூ.1 கோடியின் மதிப்பு, ரூ. 29.53 லட்சமாக இருக்கலாம்.
இதன் அடிப்படையில் இன்று நாம் ரூ. 1 கோடி செலவிட்டு வாங்கும் பொருட்களுக்கு, 25 ஆண்டுகள் கழித்து ரூ.3.4 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். 5 சவிகிதம் பணவீக்கம் என்ற அடிப்பைடயில் கணக்கிடப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்தால் ரூ.1 கோடியின் மதிப்பும் மாறலாம். இதனால் ரூ. 1 கோடி இலக்காக வைத்து சேமிப்பு அல்லது முதலீடு செய்ய துவங்கினால், எதிர்காலத்தில் அது உங்களுக்கு ஏமாற்றமாக அமையலாம் எனவே நீண்டகால நிதி திட்டமிடலின் போது பணவீக்கத்தை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.
இதையும் படிக்க : அவசர தேவைக்கு உதவும் எமெர்ஜென்சி ஃபண்ட்.. ஏன் அவசியம்?
பணவீக்கத்தை வெல்லும் 5 பாதுகாப்பான முதலீட்டு வழிகள்
பப்ளிக் பிரொவிடெண்ட் ஃபண்ட் (PPF)
இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுக்கு 7.10 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். நீண்ட காலத்துக்கு இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். அரசின் பாதுகாப்பு இதில் கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகள் வரை திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP)
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இதன் மூலம் நம் பணம் 9.5 ஆண்டுகளில் இரட்டிப்பாக லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அவசர கடன் வேண்டுமா? ஆதார், பான் கார்டு மட்டும் போதும் – உடனடி கடன் பெறும் புதிய டிஜிட்டல் வசதி!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் கிடைக்கும். இது ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்த திட்டமாக கருதப்படும். இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஃபிக்சடு டெபாசிட் (FD
இந்த திட்டத்தில் சில வங்கிகள் 6.6 சதவிகிம் முதல் 7.7 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கும். கூடுதலாக மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும்.
மியூச்சுல் ஃபண்ட் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?
இந்த திட்டத்தில் நீண்டகாலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகள் பணவீக்கத்துக்கு ஏற்ப நல்ல லாபம் ளிக்கும். ஆனால் அது நிலையானதாக இருக்காது. குறிப்பாக சில நேரங்களில் அதிக லாபம் கிடைக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இழப்பும் ஏற்படலாம். பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்றால் அரசு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் முதலீடு செய்வது சிறந்தது. ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் சிப் போன்றவை நல்லது.
நீண்டகாலத்தில், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு சந்தை பணவீக்கத்தை மிஞ்சும் வருமானம் தரலாம். ஆனால் இவை நிலையானவை அல்ல; சில நேரங்களில் அதிக லாபமும், சில நேரங்களில் இழப்பும் ஏற்படலாம். பாதுகாப்பு முதன்மை என்றால், அரசு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்புகள் சிறந்த தேர்வு. ஆபத்தை ஏற்கத் தயாராக இருந்தால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP போன்றவை நீண்டகாலத்தில் நல்லது.