ஒரே நாளில் ரூ.12,000 உயர்வு.. தங்கம் விலை குறைந்த நிலையில், தட்டி தூக்கிய வெள்ளி!
Gold Price Reduced and Silver Price Hiked | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. அதே வேளையில் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 27 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 27, 2026) தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இன்று ஒரு நாள் மட்டும் வெள்ளி ரூ.12,000 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புவிசார் பதற்றத்தால் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கிய காரணி தான் புவிசார் பதற்றம். எப்போதேல்லாம் உலக அளவில் புவிசார் பதற்றம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி அதில் முதலீடு செய்வர். தற்போது வெனிசுலா- அமெரிக்கா, ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அவை தங்கம் மற்றும் வெள்ளி மீது மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க : பட்ஜெட் 2026: பழைய மற்றும் புதிய வரி விதி முறை.. சம்பளம் பெறுவோர் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
உச்சத்தை தொட்ட தங்கம் – ஒரு சவரன் ரூ.1,19,000
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 18 ஜனவரி 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 19 ஜனவரி 2026 | ரூ.13,450 | ரூ.1,07,600 |
| 20 ஜனவரி 2026 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| 21 ஜனவரி 2026 | ரூ.14,415 | ரூ.1,15,320 |
| 22 ஜனவரி 2026 | ரூ.14,200 | ரூ.1,13,600 |
| 23 ஜனவரி 2026 | ரூ.14,550 | ரூ.1,16,400 |
| 24 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 25 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 26 ஜனவரி 2026 | ரூ.15,025 | ரூ.1,20,200 |
| 27 ஜனவரி 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
இவ்வாறு கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : ஓய்வு காலத்தை நிதி சிக்கலற்றதாக மாற்றும் 3 திட்டங்கள்.. இத படிங்க!
ஒரே நாளில் ரூ.12,000 வரை உயர்ந்த வெள்ளி
இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.387-க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.