Gold Price : ரூ.640 விலை குறைந்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Reduced and Silver Price Remain Same | சென்னையில் நேற்று (பிப்ரவரி 19, 2026) தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 20, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ரூ.640 விலை குறைந்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Feb 2026 10:33 AM

 IST

சென்னை, பிப்ரவரி 20 : சென்னையில் நேற்று (பிப்ரவரி 19, 2026) தங்கம் விலை (Gold Price) உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 20, 2026) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது ரூ.14,500-க்கு மேல் சென்ற ஒரு கிராம் தங்கம் தற்போது மீண்டும் ரூ.14,500-க்கு கீழ் வந்துள்ளது. நேற்று விலை குறைந்த வெள்ளி (Silver), இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீரான விலையில் விற்பனை செய்யப்படும் தங்கம்

2026, ஜனவரி மாதத்தில் புவிசார் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து உச்சத்தை அடைந்தது. ஆனால், ஜனவரி 29, 2026 அன்று முதல் அப்படியே நிலமை தலைகீழாக மாற தொடங்கியது. அன்று முதல் தங்கம் விலை சரிய தொடங்கிய நிலையில், தற்போது சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புவிசார் பதற்றங்கள் குறைந்துள்ளதன் காரணமாக இந்த சீரான நிலை தொடர்வதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : 2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
11 பிப்ரவரி 2026 ரூ.14,790 ரூ.1,18,320
12 பிப்ரவரி 2026 ரூ.14,600 ரூ.1,16,800
13 பிப்ரவரி 2026 ரூ.14,400 ரூ.1,15,200
14 பிப்ரவரி 2026 ரூ.14,560 ரூ.1,16,480
15 பிப்ரவரி 2026 ரூ.14,560 ரூ.1,16,480
16 பிப்ரவரி 2026 ரூ.14,400 ரூ.1,15,520
17 பிப்ரவரி 2026 ரூ.14,320 ரூ.1,14,560
18 பிப்ரவரி 2026 ரூ.14,230 ரூ.1,13,840
19 பிப்ரவரி 2026 ரூ.14,500 ரூ.1,16,000
20 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360

இதையும் படிங்க : PAN : வீட்டில் இருந்தே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

நேற்று (பிப்ரவரி 19, 2026) சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 20, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!