Gold Price : ஒரே நாளில் ரூ.1,600 குறைந்த தங்கம்.. ரூ.5,000 குறைந்த வெள்ளி!
Gold and Silver Price Reduced In Chennai | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 09 : ஈரான் (Iran) மீது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 09 ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையற்ற நிலையில் தங்கம், வெள்ளி விலை
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. புவிசார் பதற்றம், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என உலக நாடுகள் பல விதமான சிக்கல்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திரும்பியுள்ளது. இதன் காரணமாக போர் சூழலுக்கு ஏற்ப தங்கம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.. உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் Settle!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.