Gold Price : குட் நியூஸ்.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!

Gold and Silver Price In Chennai Today | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : குட் நியூஸ்.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Apr 2026 10:30 AM

 IST

சென்னை, ஏப்ரல் 29 : ஈரான் போர் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று, தங்கம் விலை சரிசை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையற்ற தன்மையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், தற்போது மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் மேற்கு ஆசிய போரின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க : வைப்பு நிதி திட்டங்களில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.. அதற்கு இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்!

இதன் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திசை திரும்பியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளதாலும், அமெரிக்க டாலர் உயர்வை கண்டு வருவதாலும் முதலீட்டாளர்களின் கவனம் அவற்றின் மீது உள்ளது. இதன் காரணமாக தான் தங்கம் விலை நிலையற்ற தன்மையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : அதிக கடன் சுமையில் இருக்கிறீர்களா?.. ரீ பைனான்சிங் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

நேற்று (ஏப்ரல் 28, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..