நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் விலை குறைந்த தங்கம்.. ரூ.90,000 -க்கு விற்பனை!

Gold Price Reduced 1200 Rupees Per Sovereign | தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த நிலையில், இன்று (அக்டோபர் 28, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் விலை குறைந்த தங்கம்.. ரூ.90,000 -க்கு விற்பனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Oct 2025 10:48 AM

 IST

சென்னை, அக்டோபர் 28 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. அதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை இருந்தது. ஆனால், தற்போது தங்கம் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 28, 2025) தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை

தங்கம் கடந்த சில நாட்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. அதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை இருந்தது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,180-க்கும் ஒரு சவரன் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கணக்கு வரை.. நவம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

தங்கம் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில் அக்டோபர் 22, 2025 அன்று சர்வதேச அளவில் கடும் விலை சரிவை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் சர்வதேச அளவில் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. அதாவது, அன்றைய தினம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தங்க விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறலாம்.. இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள்!

ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படும் தங்கம்

இன்றைய தினம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மட்டுமன்றி வெள்ளியும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுப்வது குறிப்பிடத்தக்கது.