Gold Price : தங்கம் விலை உயர்ந்தது.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

Gold Price Increased and Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம் விலை உயர்ந்தது.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Apr 2026 10:35 AM

 IST

சென்னை, ஏப்ரல் 03 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 03, 2026) அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மிக கடுமையான போர் காரணமாக சர்வதேச அளவில் புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,850-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..