Gold Price : ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Hike 1,760 Rupees In Chennai | சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 12, 2026) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Jan 2026 10:43 AM

 IST

சென்னை, ஜனவரி 12 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 12, 2026) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,760 உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் ரூ.1,05,000-த்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை அதிரடியாக உயரும் என கனித்துள்ள வல்லுநர்கள்

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள், உலக நாடுகளுக்கே இடையே நிலவும் சமாதானம், போர் ஆகியவை தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் வெனிசுலாவுக்குள் புகுந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்துள்ளது. இதற்கு சில உலக நாடுகள் ஆதரவு, சில உலக நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக புவிசார் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளியூரில் இருக்கும் நபர்கள் கவனத்திற்கு.. பொங்கல் பரிசுத் தொகை வாங்க இது கட்டாயம்!

ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

தேதி ஒரு கிராம் ஒரு சவரன்
03 ஜனவரி 2026 ரூ.12,600 ரூ.1,00,800
04 ஜனவரி 2026 ரூ.12,600 ரூ.1,00,800
05 ஜனவரி 2026 ரூ.12,760 ரூ.1,02,080
06 ஜனவரி 2026 ரூ.12,830 ரூ.1,02,640
07 ஜனவரி 2026 ரூ.12,800 ரூ.1,02,400
08 ஜனவரி 2026 ரூ.12,750 ரூ.1,02,000
09 ஜனவரி 2026 ரூ.12,800 ரூ.1,02,400
10 ஜனவரி 2026 ரூ.12,900 ரூ.1,03,200
11 ஜனவரி 2026 ரூ.12,900 ரூ.1,03,200
12 ஜனவரி 2026 ரூ.13,120 ரூ.1,04,960

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!