Gold Price : மூன்றாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price Cut Down In Chennai | சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 18, 2026) மூன்றாவது நாளாக மீண்டும் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மூன்றாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Feb 2026 13:11 PM

 IST

சென்னை, பிப்ரவரி 18 : சென்னையில் இன்று (பிப்ரவரி 18, 2026) மூன்றாவது நாளாக தங்கம் விலை (Gold Price) குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்த தங்கம் விலை

2026, ஜனவரி மாத இறுதியில் கடும் உச்சத்தில் இருந்த தங்கம், கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது, பிப்ரவரி 16, 2026 முதல் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் உலக அளவில் புவிசார் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது புவிசார் பதற்றங்கள் குறைந்து சுமூகமான சூழல் நிலவும் நிலையில், தங்கம் பெரிய அளவிலான விலை ஏற்றம் இன்றி சீராக விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. முதல்ல இந்த விஷயங்களை கவனியுங்கள்!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
பிப்ரவரி 09, 2026 ரூ.14,650 ரூ.1,17,200
பிப்ரவரி 10, 2026 ரூ.14,580 ரூ.1,16,640
பிப்ரவரி 11, 2026 ரூ.14,790 ரூ.1,18,320
பிப்ரவரி 12, 2026 ரூ.14,600 ரூ.1,16,800
பிப்ரவரி 13, 2026 ரூ.14,400 ரூ.1,15,200
பிப்ரவரி 14, 2026 ரூ.14,560 ரூ.1,16,480
பிப்ரவரி 15, 2026 ரூ.14,560 ரூ.1,16,480
பிப்ரவரி 16, 2026 ரூ.14,440 ரூ.1,15,520
பிப்ரவரி 17, 2026 ரூ.14,320 ரூ.1,14,560
பிப்ரவரி 18, 2026 ரூ.14,230 ரூ.1,13,840

இதையும் படிங்க : இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வரும்.. ரஷ்யாவின் முடிவு எதிரொலிக்கும்.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்று (பிப்ரவரி 18, 2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வருவது சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!