வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.98,000-க்கு விற்பனை!

Gold Price Selling At 98,000 Rupees | தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே கடும் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று புதிய உச்சமாக ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ரூ.98,000-த்தை தாண்டியுள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.98,000-க்கு விற்பனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Dec 2025 10:39 AM

 IST

சென்னை, டிசம்பர் 12 : 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) கடும் உயர்வை அடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 12, 2025) தங்கம் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. அதாவது இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் கடும் விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஜாக்பாட் ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், 2025 தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் அதிகபட்சமாக ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதே அளவில் கடும் சரிவை சந்தித்த நிலையில், அதன் பிறகு ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிறகு மீண்டும் படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.98,000 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!

ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம்

தேதி  கிராம்  சவரன் 
03 டிசம்பர் 2025 ரூ.12,060 ரூ.96,480
04 டிசம்பர் 2025 ரூ.12,020 ரூ.96,160
05 டிசம்பர் 2025 ரூ.12,000 ரூ.96,000
06 டிசம்பர் 2025 ரூ.12,040 ரூ.96,320
07 டிசம்பர் 2025 ரூ.12,040 ரூ.96,320
08 டிசம்பர் 2025 ரூ.12,040 ரூ.96,320
09 டிசம்பர் 2025 ரூ.12,000 ரூ.96,000
10 டிசம்பர் 2025 ரூ.12,030 ரூ.96,240
11 டிசம்பர் 2025 ரூ.12,050 ரூ.96,400
12 டிசம்பர் 2025 ரூ.12,250 ரூ.98,000

இதையும் படிங்க : Year Ender 2025: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – அதிரடியாக குறைந்த கார், பைக் விலை

இன்றைய தங்க  விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம்  கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250-க்கும், ஒரு சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாக உள்ளது. தங்கம் ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்