இந்த ஆண்டு தங்கத்தின் இறக்குமதி சரியும்.. உலக தங்க கவுன்சில் சொன்ன முக்கிய விஷயம்!
World Gold Council On Gold Import | உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு எதிராக இந்த ஆண்டு தங்கத்தின் இறக்குமதி சரியும் என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

மாதிரி புகைப்படம்
உலக அளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் 2026 ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.2 லட்சத்தை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வரும் நிலையில், அது சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், உலக தங்க கவுன்சில் (World Gold Council) முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தின் தேவை வெகுவாக குறைந்துள்ளது
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு எதிரான நாட்டின் தங்கத்தின் தேவை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி அளவு 11 சதவீதமாக சரிந்து 710 டன்னாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : உள்நாட்டு தேவை உந்து சக்தியாக திகழ்கிறது.. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!
2024 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 802 டன் தங்கம்
2024 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 802.8 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 930 கோடியில் இருந்து ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 490 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில் விலை உயர்வு, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றம் ஆகியவற்றின் காரணமாக நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி 600 டன் ஆக சரியும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தொடர்ந்து உயரும் மருத்துவ செலவுகள்.. 2026 பட்ஜெட்டில் தீர்வு கிடைக்குமா?
உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் முதலீடு செய்வது, உலக வங்கிகள் தங்கத்தை வாங்கி சேமிப்பது ஆகியவை தங்கத்தின் விலையை கடும் உச்சத்தில் வைத்துள்ளது. இவ்வாறு தங்கம் விலை உச்சத்தை தொடும்போது விலை உயர்வு காரணமாக அதன் நுகர்வும் குறையும். தற்போது உலக அளவில் அத்தகைய சூழல் உருவாகியுள்ள சூழலில் இந்த ஆண்டு தங்கத்தின் இறக்குமதி குறைவாக இருக்கும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.