தங்கம் விலை, மே 7, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த சூழலில், மே 7ஆம் தேதியான இன்று சற்று உயர்வைக் கண்டுள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பூகோள அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து நிலைமாறுபாட்டுடன் காணப்படுகிறது.
தங்கம் விலை உயர என்ன காரணம்?
தங்கத்தின் விலை என்பது உள்நாட்டு தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக, சர்வதேச பொருளாதார நிலைமைகள், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு போன்ற காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.
மேலும் படிக்க: முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். அதேபோல், போர் சூழல் அல்லது நாடுகளுக்கிடையிலான மோதல்கள் போன்ற பூகோள அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு:
தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை மே 7ஆம் தேதியான இன்று உயர்வுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,436க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,23,488க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
வெள்ளியின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.