தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. வாரத்தின் முதல் நாளே உச்சம் தொட்டது!!
Gold and Silver Price Hiked: அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 23: தமிழகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,860க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆதாரில் இத பண்ணலனா உங்கள் வங்கி கணக்கில் இருக்கு பணத்துக்கு சிக்கல்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
சனிக்கிழமை தங்கம் விலை நிலவரம்:
நேற்று முன் தினம் (சனிக்கிழமை) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கும் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாத இடையில் சிறிது நாட்களுக்கு இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஏறுமுகம் காணத் தொடங்கியுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், சாமானிய மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை:
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கம் விலை பொறுத்தவரையில் குறையும் போது சொற்ப அளவிலும், அதிகரிக்கும் போது மட்டும் ஜெட் வேகத்தில் உயருகிறது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை அதிகரித்த நிலையில், இந்த ஆண்டும் விலையேற்றம் தொடரும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். அதே போன்று 2026-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வந்தது.
இதையும் படிங்க: 2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:
| பிப்ரவரி 23 | – ரூ.1,18,880 |
| பிப்ரவரி 22 | – ரூ.1,17,440 |
| பிப்ரவரி 21 | – ரூ.1,17,440 |
| பிப்ரவரி 20 | – ரூ.1,15,360 |
| பிப்ரவரி 19 | – ரூ.1,16,000 |
| பிப்ரவரி 18 | – ரூ.1,13,840 |
| பிப்ரவரி 17 | – ரூ.1,14,560 |
| பிப்ரவரி 16 | – ரூ.1,15,520 |
| பிப்ரவரி 15 | – ரூ.1,16,480 |
| பிப்ரவரி 14 | – ரூ.1,16,480 |
18 மற்றும் 24 காரட் தங்கம் விலை:
அதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் ரூ.16,211க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,29,688க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,720க்கும் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.