மீண்டும் சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இன்றைய நிலவரம்..

Gold and silver Prices Drop: சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அவ்வப்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. அவ்வாறு நேற்றைய தினம் உயர்ந்த தங்கம் விலை, இன்று சரிந்துள்ளது.

மீண்டும் சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இன்றைய நிலவரம்..

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

02 Apr 2026 10:37 AM

 IST

Gold Price Today: கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை, ஏப்ரல் மாத முதல் நாளான நேற்று கடும் உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று ஒரேநாளில் சவரனுக்கு 3, 040 வரை உயர்ந்தது. குறிப்பாக, நீண்ட நாட்களாக 1,10,000க்குள் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் மீண்டும் 1,12,000ஐ தாண்டி மீண்டும் உச்சம் தொடத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை உயரலாம் என்று எதிர்பார்த்து அச்சத்தில் இருந்த மக்களுக்கு ஆறுதலாக, இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன் மூலம் நகைப்பிரியர்கள், திருமணத்திற்கு நகை எடுக்க திட்டமிட்டு வருபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை:

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10,000 குறைந்து ஒரு கிலோ 2,55,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:

தேதி  கிராம்   சவரன் 
24 மார்ச் 2026 ரூ.13,250 ரூ.1,06,000
25 மார்ச் 2026 ரூ.13,600 ரூ.1,08,800
26 மார்ச் 2026 ரூ.13,350 ரூ.1,06,800
27 மார்ச் 2026 ரூ.13,430 ரூ.1,07,440
28 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
29 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
30 மார்ச் 2026 ரூ.13,770 ரூ.1,10,160
31 மார்ச் 2026 ரூ.13,670 ரூ.1,09,360
1 ஏப்ரல் 2026 ரூ.14,050 ரூ.1,12,400
2 ஏப்ரல் 2026 ரூ.13,950 ரூ.1,11,600

டிரம்ப் உரைக்குப் பிறகு விலை சரிவு:

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வியாழக்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில், சர்வதேசச் சந்தைப் போக்கிற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே அழுத்தத்திற்கு உள்ளாகி விலை சரிவைக் கண்டன. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?

தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய டிரம்ப், வரும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் “மிகவும் கடினமான” தாக்குதல்கள் இருக்கும் என்று எச்சரித்ததோடு, இந்த மோதலில் அமெரிக்கா தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கள் சர்வதேசச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதன் எதிரொலியாக உள்நாட்டுச் சந்தையிலும் வர்த்தகத் தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு காணப்பட்டது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?