உசிலம்பட்டி முதல் இந்திய ராணுவம் வரை…. பெர்ரிஸ் பிஸ்கட்டின் வெற்றிக்கான காரணம் என்ன?

100 Years, One Brand: தமிழகத்தில் இருந்து ஒரு நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதுதான் பெர்ரிஸ் பிஸ்கட்ஸ். உசிலம்பட்டியில் தொடங்கப்பட்ட நிறுவனம் தனித்துவமான விற்பனை யுக்தி காரணமாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

உசிலம்பட்டி முதல் இந்திய ராணுவம் வரை.... பெர்ரிஸ் பிஸ்கட்டின் வெற்றிக்கான காரணம் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

15 Aug 2025 15:28 PM

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கப்பட்ட பிஸ்கட் (Biscuit) நிறுவனம் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அளவுக்கு பிரபலமானது. அந்த காலத்தில் உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட பிஸ்கட் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்திருக்கின்றன. இதனையடுத்து உசிலம்பட்டி பகுதி பிஸ்கட் டவுன் என அழைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1917 ஆம் ஆண்டு மதுரை (Madurai) மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியசாமி மற்றும் பழனிக்குமார் இணைந்து வீட்டின் முன் சிறிய பிஸ்கட் தொழிற்சாலையை தொடங்குகின்றனர். அவர்களுடன் அப்போது பிஸ்கட் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் தற்போது ஒன்று கூட இல்லை. இன்று அவர்களது பிஸ்கட் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அவர்கள் தொடங்கிய நிறுவனம் 5 தலைமுறைகளாக நிலைத்திருப்பதற்கான காரணம் ஒன்றுதான்.அது புதுமையான வியாபார யுக்தி. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், 1921 ஆண் ஆண்டு பெர்ரிஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பெர்ரிஸ் என்பது அதன் நிறுவனர்களின் ஒருவரான பெரியசாமியின் பெயரை சுருக்கி உருவாக்கப்பட்ட பெயர் என்று கூறப்படுகிறது. பிஸ்கட் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களான மைத போன்றவை உள்ளூர் சந்தையில் கிடைக்காது. மும்பையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்படும் பிஸ்கட்களுக்கு நிகரான தரத்தில் பெர்ரிஸ் பிஸ்கட் பெயரிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : சரியான திட்டமிடல்… வித்தியாசமான வியாபர யுக்தி – ரூ.2000 கோடி நிறுவனமாக வளர்ந்த ஆச்சி

வெற்றிக்கு காரணமான வியாபார யுக்தி

வியாபாரத்தை பொறுத்தவரை போட்டிகளை சமாளிக்க புதுவிமான யுக்திகளை பெர்ரிஸ் நிறுவனம் மேற்கொண்டது. உதாரணமாக பல பிஸ்கட் வட்ட மற்றும் சதுர வடிவில் பிஸ்கட் தயாரித்த போது, பெர்ரிஸ் நிறுவனம், யானை, குதிரை போன்ற விலங்குகள் வடிவில், நம்பர் மற்றும் எழுத்துகள் வடிவில் என விதவிதமான வடிவங்களில் பிஸ்கட்களை தயாரித்தது.  அதே போல உற்பத்தியில் மெனக்கெட்டாலும் விலையை அதிகரிக்காமல் சராசரி விலையில் விற்றனர். மேலும் அப்போது மார்க்கெட்டில் முதன்முறையாக கண்ணாடி ஜாரில் பிஸ்கட்களை விற்பனைக்கு வைத்திருந்தது ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற சுதேஷி கண்காட்சியில் மிகச்சிறந்த இந்திய தயாரிப்பாக பெர்ரிஸ் நிறுவனத்தின் பிஸ்கட் தேர்ந்தெடு்கப்பட்டது.

இதையும் படிக்க : லட்சக்கணக்கில் வருமானம்… வங்கி வேலையை விட்டு உணவுத் தொழிலில் சாதித்த தஞ்சாவூர் பெண்

ராணுவத்தில் சிற்றுண்டியாக பயன்படுத்தப்பட்ட பெர்ரிஸ் பிஸ்கட்

பெர்ரிஸ் நிறுவனத்தின் தரம், வித விதமான பிஸ்கட்கள் காரணமாக நாளடைவில் உலக மக்களை ஈர்ததது. இதனால் வியாபாரம் பெருகியது. ஒரு கட்டத்தில் இந்திய ராணுவத்தில் சிற்றுண்டியாக பெர்ரிஸ் பிஸ்கட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி பிஸ்கட்களின் வடிவங்களை மாற்றி வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்துள்ளது. தற்போது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெர்ரிஸ் பிஸ்கட் ஏற்றுமதியாகிறது. 50 நிறுவனங்கள் இருந்த உசிலம்பட்டியில் தற்போது ஒரே நிறுவனமாக பெர்ரிஸ் செயல்படுகிறது. இதனை 5வது தலைமுறையான மகேந்திரவேல் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.