EPFO: இனி இந்த சேவைக்கு முக அடையாள சரிபார்ப்பு அவசியம் – நடைமுறைக்கு வரும் புதிய விதி
New EPFO Rule : பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை நிர்வகிக்க யுஏஎன் கட்டாயம். ஆனால் தற்போது பிஎஃப் கணக்கில் புதிதாக இணையும் பணியாளர்களுக்கு யுஏஎன் பெரும் நடைமுறைகளில் புதிய விதியை இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) முக்கியமான மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இனி புதிதாக இபிஎஃபஓ கணக்கில் இணையும் நபர்களுக்கு யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN), ஆதார் (Adhaar)அடிப்படையிலான முக அடையாள சரிபார்ப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று முதல் நடைமுறைக்குவரவுள்ளது. பணியாளர்கள் பிஎஃப் கணக்கை நிர்வகிக்க யுஏஎன் கட்டாயம். இது தனித்துவ அடையாள எண் இபிஎஃப்ஓவில் இணையும் அனைவருக்கும் வழங்கப்படும். இதன் அடிப்பைடியில் இபிஎஃப்ஓ கணக்கில் லாகின் செய்து பிஎஃப் கணக்கை நிர்வகிப்பது, அவசர தேவைகளுக்கு பணம் எடுப்பது போன்ற வேலைகளை செய்யலாம்.
உமாங் செயலியில் மூலம் யுஏஎன் பெறும் முறை
இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தற்போது உமாங் செயலி மற்றும் ஆதார் ஆப் மூலம் தங்களுடைய முக அடையாள சரிபார்ப்பு செய்து யுஏஎன் பெறலாம். இதற்காக யுபிஎஃப்ஓ அலுவலகம் சென்று நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.
இதையும் படிக்க : வாகனத்தின் ஆர்சி தொலைந்து விட்டதா? நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- உமாங் ஆப் ஓபன் செய்யவும்
- UAN allotment and activation என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்
- ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
- Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
- ஆதார் ஏற்கனவே வேறு யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக என சரிபார்க்கப்படும்.
- பின்னர் உங்கள் Face Authentication முறை மூலம் உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்படும்.
- பின்னர் உங்களுக்கான யுஏஎன் ஜெனரேட் செய்யப்படும்.
- பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு யுஏஎண் மெசேஜ் அனுப்பப்படும்.
இதையும் படிக்க : ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் கட்டணம் செலுத்த வேண்டாம்.. ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதன் நன்மைகள்
முன்பு புதிய ஊழியர்கள் யுஏஎன் எண்ணை தங்கள் நிறுவன எச்ஆர் வாயிலாக மட்டுமே பெற முடியும் தற்போது இந்த செயல்முறை நாமாக மேற்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு இனி இந்த நடமுறையே பின்பற்றப்படும். வேறு ஒருவர் உதவியின்றி நாமே யூஏஎன் பெற முடியும். ஆதார் மூலம் முக அடையாளம் சரிபார்க்கப்படும் என்பதால் மோசடிகள் தடுக்கப்படும். இனி எளிதாகவும், விரைவாகவும் யுஏஎஎன் பெறலாம். இதற்கு ஆதார் கார்டு மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் கொண்ட போன் ஆகியவை இருந்தால் போதும் உங்களால் யுஏஎன் எளிதாக பெறலாம்.
முக அடையாள சரிபார்ப்பு முறை பிஎஃப் கணக்குகளை பாதுகாப்பாக கையாள்வதற்கான முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு இந்த அம்சம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.