EPFO: தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெற முடியுமா? என்ன காரணங்களுக்கு அட்வான்ஸ் பெற முடியும்?

PF Advance Withdraw Rule: குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பிஎஃப் தொகையில் இருந்து அட்வான்ஸ் பெற இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது. ஆனால் சிலருக்கு பிஎஃப் தொகையில் இருந்து பலமுறை அட்வான்ஸாக பெற முடியுமாஎ என்ற சந்தேகம் இருக்கும். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

EPFO: தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெற முடியுமா? என்ன காரணங்களுக்கு அட்வான்ஸ் பெற முடியும்?

மாதிரி புகைப்படம்

Published: 

04 Jul 2025 21:57 PM

அரசு மற்றும் தனியார் துறையில் பணியில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியத்திற்கான (Pension) பாதுகாப்பாக செயல்படுவது தான் EPF (Employees Provident Fund) திட்டம். இதை EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் நிர்வத்து வருகிறது.  பிஎஃப் என்பது ஓய்வு கால நிதி சேமிப்பு திட்டமாகும். ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படி (DA) தொகையில் 12% அவரால் செலுத்தப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கிறது.  இந்த இரண்டும் தொகையும் ஒவ்வொரு மாதமும் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவசர காலங்களில் நிதி சிக்கல் ஏற்படும்போது குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

முன்கூட்டிய குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக பெறலாம்

இபிஎஃப்ஓ தவிர்க்க முடியாத அவசர காலங்களில் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே பெற அனுமதிக்கிறது. குறிப்பாக மருத்துவம், திருமணம், கல்வி, வீட்டுக்கடனை திரும்ப செலுத்த போன்ற காரணங்களுக்கு தொகையை திரும்ப பெறலாம்.  ஒவ்வொரு காரணங்களுக்கும் எத்தனை முறை அட்வான்ஸ் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மருத்துவம்

மருத்துவ காரணங்களுக்காக அட்வான்ஸ் பெற பணிபுரியும் காலம் முக்கியமில்லை. இதற்கு ஊழியரின் பங்களிப்பு அல்லது நிறுவனத்தின் பங்களிப்பில் இருந்து 6 மாத தொகையை பெறலாம். இதனை பல முறை பெற முடியும்.

திருமணம் மற்றும் கல்வி

குறைந்தது 7 ஆண்டுகள் வேலையில் இருப்பது அவசியம். ஊழியரின் பங்களிப்பில் 50 சதவிகிதம் வட்டியுடன் பெற முடியும். திருமணம் மற்றும் கல்விக்காக அதிகபட்சம் 3 முறை மட்டுமே பெற முடியும்.

வீட்டை மேம்படுத்தும் பணி

இந்த காரணத்துக்காக 5 ஆண்டுகள் பணியில் இருந்தாக வேண்டும். மேலும் மாத ஊதியத்தின் 12 மடங்கு தொகை பெறலாம்.

வீட்டு கடன் திருப்பிச் செலுத்த

குறைந்தது 3 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். பிஎஃப் தொகையில் 90 சதவிகிதம் வரை பெற அனுமதி அளிக்கிறது.

ஓய்வுக்கான முன் தொகை

இதற்கு ஓய்வு பெறுவதற்கு முன் பிபிஎஃப் தொகையில் 90 சதவிகிதம் வரை பெறலாம்.

தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெறலாமா?

சில நேரங்களில் தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெற அனுமதி இருக்கிறது.  குறிப்பிட்ட தொகை வரை தொடர்ச்சியாக பெறலாம். உதாரணமாக திருமணம் மற்றும் கல்விக்கு 3 மூன்று முறை வரை எடுக்கலாம். ஆனால் வீட்டை மேம்படுத்த ஒரே ஒருமுறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும்.

 பிஎஃப் பணத்தை எப்படிப் பெறலாம்?

ஆன்லைன் முறையில் https://www.epfindia.gov.in என்ற முகவரியில் யுஏஎன், ஆதார், பான், வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அதேபோல ஆஃப்லைன் முறையில், அருகில் உள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்துக்கு சென்று ஃபார்ம் 19/10சி/31  ஆகிய கிளைம் ஃபார்ம்களை மற்றும் அடையாள ஆவணங்களை சமர்பிக்கலாம்.