Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Education Loan : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கல்விக் கடன் பெறுவது எப்படி?

Easy Tips to Education Loan : இந்தியாவில் ஆண்டுதோறும் கல்வி கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கல்விக் கடன் பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் சரியான கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கல்விக் கடன் பெறுவது மிகவும் சவாலானது. இந்த நிலையில் கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் பெறுவது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Education Loan : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கல்விக் கடன் பெறுவது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 May 2025 16:06 PM

இந்தியாவில், உயர் கல்வி செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் அதனை சமாளிப்பது சவாலானதாக இருந்து வருகிறது.  இதனால், பல மாணவர்களுக்கு கல்விக் கடன் (Education Loan) என்பதே தீர்வாக இருக்கிறது.  இவை, மாணவர்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்குவதுடன், அவர்களின் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) உயர்வதற்கும் காரணமாக அமைகிறது. கிரெடிட் ஸ்கோர் என்பது, ஒரு நபரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அளவிடும் முறையாகும். ஒருவரது கிரெடிட் ஸ்கோர் அவர் கடனை திருப்பி செலுத்தும் முறையின் அடிப்படையில் 300 முதல் 900 வரை இருக்கும்.

மாணவர்கள், கல்விக் கடன்களை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம், நல்ல கிரெடிட் ஸ்கோர் உருவாக்க முடியும். இது, எதிர்காலத்தில் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றைப் பெற உதவும். கிரெடிட் ஸ்கோர் இல்லாத மாணவர்கள், கடன் விண்ணப்பதாரராக பெற்றோர் அல்லது பாதுகாவலரை சேர்த்து, கல்விக் கடன்களை பெற முடியும். 

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கடன் பெறலாம்

கிரெடிட் ஸ்கோர் இல்லாத மாணவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரை இணை விண்ணப்பதாரராக சேர்த்து கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இணை விண்ணப்பதாரராக சேர்க்கப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானம் மற்றும் நிதி நிலைமை ஆகியவை கடன் ஒப்புதலுக்கு முக்கியமாக கருதப்படும். அவர்களின் கிரெடிட் ஸ்கோர் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம் (Prime Minister Vidyalakshmi Scheme)

இந்த திட்டம், மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு பெரிதும் கைகொடுக்கிறது.  இந்த திட்டத்தின் கீழ், ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு, அவர்களது குடும்ப வருமானம் முக்கியமான காரணமாக கருதப்படாது. அத்துடன், ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரையிலான குடும்ப வருமானம் உள்ள மாணவர்கள், முழு வட்டி சலுகையைப் பெறலாம்.

நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறலாம்

பொதுவாக, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மாணவர்களின் கல்விக் கடன்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகின்றன. உதாரணமாக, டாடா கேப்பிடல்ஸ், எச்டிஎஃப்சி போன்ற நிறுவனங்கள், மாணவர்களின் கல்விக் கடன்களுக்கு 11% முதல் 13.5% வரை வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன. 

சில தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை மாணவர்களின் கல்வி மதிப்பெண்களைப் பொருத்து,  கடன் வழங்குகின்றன. மாணவர்கள் பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று அதன் மூலம் கடன் பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம். 

ஸ்காலர்ஷிப்

மாணவர்கள், கல்விக் கடன்களுக்கு மாற்றாக, ஸ்காலர்ஷிப் மூலம் உதவித்தொகை பெற முயற்சிக்கலாம். இந்த உதவித்தொகைகள், பெரும்பாலும் திருப்பிச் செலுத்த வேண்டிய தேவை இல்லாததால், அவை நமது கல்வி செலவுகளை குறைக்க உதவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்......
அம்மாவை காணோம்..! தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி தோல்வி
அம்மாவை காணோம்..! தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி தோல்வி...
போர் நிறுத்தம் - இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!
போர் நிறுத்தம் - இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!...
12 ஆண்டுகளை நிறைவு செய்தது அல்போன்சு புத்திரனின் நேரம் படம்...
12 ஆண்டுகளை நிறைவு செய்தது அல்போன்சு புத்திரனின் நேரம் படம்......
திபெத்தில் நிலநடுக்கம்... பீதியில் அலறிய மக்கள்..
திபெத்தில் நிலநடுக்கம்... பீதியில் அலறிய மக்கள்.....
'உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம்' – ராமதாஸ்
'உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம்' – ராமதாஸ்...
ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா?
ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா?...
மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை - தானும் விபரீத முடிவு!
மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை - தானும் விபரீத முடிவு!...
திருப்பதி பேருந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திருப்பதி பேருந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!...
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?...