மாதம் ரூ.20,000 சம்பளத்தில் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இந்த திட்டத்தை டிரை பண்ணுங்க!
Step‑Up Investment Plan : இந்தியாவில் வெறும் 20 சதவிகிதம் பேர் தான் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்துள்ளனர். மீதமுள்ள 80 சதவிகிதம் பேர் தங்ள் வாழ்நாள் முழுவதும் அதற்காக முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி முதலீட்டுத் திட்டங்களின் வழியாக வெகு விரைவாக நம் இலக்கை அடையலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நம்மில் பலருக்கு ஒரு நாள் கோடீஸ்வரராக வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கிறோம். ஆனால் மாதம் ரூ.20,000 சம்பளம் பெறும் பலருக்கு இது சாத்தியமற்ற ஒரு கனவாகத் தெரிகிறது. ஆனால் சரியான திட்டமிடல், நிலையான முதலீடுகள், மற்றும் நீண்ட கால நிதி நம்பிக்கையால் ரூ.1 கோடி நிதியை உருவாக்க முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் மியூச்சுவல் பண்டுகள் (Mutual Fund) போன்ற முதலீட்டு கருவிகள் சிறிய தொகையிலேயே பெரிய நிதி இலக்குகளை அடைய உதவுகின்றன. ஒருவரது மாத சம்பளத்திலிருந்து ரூ.500 என்ற குறைந்த தொகையிலேயே சிப் (SIP) என்ற திட்டத்தில் முதலீடு செய்யத் துவங்கலாம். இதனால் சேரும் தொகையில் கூட்டு வட்டி (Compounding) செயல்பட்டு, காலப்போக்கில் பெரிய தொகையை உருவாக்க முடியும்.
மாதம் ரூ.4,000 முதலீடு செய்து ரூ. 1 கோடி சேர்க்கலாம்!
தொடக்கத்தில் சிப் திட்டத்தில் ரூ.3,000 முதல் ரூ. 5,000 வரை முதலீடு செய்யலாம். வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் ‘Step-Up SIP’ வாயிலாக முதலீட்டை வருடத்திற்கு 10% உயர்த்தலாம். உதாரணமாக நமது இலக்கு ரூ.1 கோடி என வைத்துக்கொள்வோம். மாதம் ரூ. 4,000 முதலீடு செய்வதன் மூலம், ஆண்டு வருமானம் 12 சதவிகிதம் என்ற அடிப்படையில் 22 ஆண்டுகளில் இலக்கை அடையலாம். இதற்கு நாம் ஆண்டுக்கு நம் முதலீட்டை 10 சதவிகிதம் உயர்த்த வேண்டும். இப்படியே தொடர்ந்தால் நம் முதலீடு ரூ.34,27,331 ஆகவும், லாபம் ரூ.74,41,608 எனவும் சேர்ந்து மொத்தம், ரூ.1,08,68,940 ஆக உயரும்.
இதையும் படிக்க : ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20, 000 வருமானம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
மியூச்சுவல் பண்டுகளுடன் சேர்த்து, தங்கம், வெள்ளி மற்றும் அரசு ஆதரவு பெறும் வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இது பங்கு சந்தை சார்ந்த முதலீடுகளின் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
இதையும் படிக்க : வாரம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
நிதி ஆலோசகரிடம் உதவி கேட்கலாம்
நீங்கள் எந்த ஒரு முதலீட்டுத் திட்டங்களிலும் இணைவதற்கு முன், பணவீக்கம் (Inflation), வரிகள் (Taxes), மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மேல் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு நிதி ஆலோசகரை சந்தித்து, உங்களது தேவைகளுக்கேற்ற ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். கொஞ்சம் பொறுமை, திட்டமிடல், மற்றும் நிலைத்த மனப்பாங்கு இருந்தால், மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்கும் ஒருவர் கூட ரூ.1 கோடி நிதி இலக்கை அடைய முடியும். இதுபோன்ற திட்டங்கள் எளிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதனால அவற்றை சரியாக திட்டமிட்டு செயல்புரிந்தால் நமக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.