மரணமடைந்த நபரின் ஆதாரை முடக்குவது ஏன் அவசியம்? எப்படி செய்வது?
New Aadhaar Update Rule: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இறந்த நபரின் ஆதாரை முடக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இறந்தவர்களின் ஆதாரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும். இந்த புதிய முறையில் இறந்தவர்களின் ஆதாரை எப்படி முடக்குவது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் மிகவும் அத்தியாவசியமான அடையாள ஆவணமாக ஆதார் (Aadhaar) விளங்குகிறது. அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் மிகவும் கட்டாயம். ஒருவரின் பெயர், பிறந்த தேதி முதல் கைரேகை வரை அனைத்து அடையாள ஆவணங்களும் ஆதாரில் இடம்பெற்றுள்ளது. எனவே அதனை மிகவும் கவனமாக கையாள்வது மிகவும் அவசியம். இந்த நிலையில் குடும்ப உறுப்பினரின் மரணத்தை பதிவு செய்ய புதிய வசதியை தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினரால் myAadhaar போர்டல் வாயிலாக நேரடியாக அப்டேட் செய்து, மரணமடைந்த நபரின் ஆதார் எண்ணை முடக்க முடியும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஏன் இந்த புதிய நடைமுறை அவசியமாகிறது?
மரணமடைந்த ஆதார் எண்ணை முடக்குவது அவசியம். இதன் மூலம் அரசின் சலுகைகளை எவ்வித சிக்கலும் இல்லாமல் பெற முடியும். இறந்தவரின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க முடியும். மேலும் பல்வேறு ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க முடியும். காரணம் இந்தியாவில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் பெரும்பாலும் இறந்த நபர்களின் அடையாளங்களை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன. எனவே உடனடியாக இறந்த நபரின் ஆதாரை முடக்குவது நமக்கு தேவையில்லாத சிக்கலை தவிர்க்க உதவும்.
இதையும் படிக்க: இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் வகைகள் என்ன? சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?
இறப்பை பதிவு செய்ய தேவையான ஆவணம்
கடந்த ஜூன் 9, 2025 அன்று முதல் ஆதார் போர்டலில் Report Death of Family Member என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வசதி செயல்படுகிறது. இந்த முறையில் ஒருவரின் இறப்பை பதிவு செய்ய அவரின் ஆதார் எண், இறப்பு சான்றிதழ், அவர் மரணித்த தேதி, உள்ளிட்ட தகவல்களை சமர்பிக்க வேண்டும். பின்னர் ஆதார் அமைப்பு சான்றுகளை சரிபார்த்து, மரணமடைந்த நபரின் ஆதார் முடக்கப்படும்.
இதையும் படிக்க: மீண்டும் குறையும் ரெப்போ ரேட்?.. வட்டி குறைக்கப்படுவதால் யாருக்கு லாபம்?.. யாருக்கு நஷ்டம்?
இறப்பை பதிவு செய்வது எப்படி?
முறை:
-
myaadhaar.uidai.gov.in தளத்திற்கு செல்ல வேண்டும்.
-
“Report Death of a Family Member” என்பதைத் தேர்வு செய்து
-
இறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
இந்த தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின், UIDAI இறந்த நபரின் ஆதார் எண் முடக்கப்படும். ஒருவரின் இறப்பு பதிவு செய்த பின் 90 நாட்களில் ஆதார் முடக்கப்படலாம்.
ஆதார் முடக்கப்பட்டதை தெரிந்துகொள்ள MyAadhaar போர்டலில் Check Aadhaar Status கிளிக் செய்யவும். அதில் மரணமடைந்த நபரின் ஆதார் முடக்கப்பட்டிருந்தால் Deactivated due tot Death என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.