வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Apply For New Voter ID By Sitting At Home | இந்திய குடிமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்துக்கொண்டே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Mar 2026 12:02 PM

 IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளது. ஒருவர் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்ய அவரது வாக்கு உரிமை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாக்காளர் அடையா அட்டை என்பது இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு முகப்பு பக்கத்தின் வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள Sign Up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அங்கு உங்களது மொபைல் எண், இமெயில் ஐடி, கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு உங்களது முதல் பெயர் அல்லது கடைசி பெயரை உள்ளிட்டு Resend OPT என்பதை கொடுக்க வேண்டும்.
  5. அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், மெயிலுக்கும் வரு  ஓடிபியை பதிவிட வேண்டும்.
  6. பிறகு Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  7. தற்போது மீண்டும் Log In பக்கம் தோன்றும். அதில், உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்து மீண்டும் Resend OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  8. பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  9. பிறகு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள New Voter Registration பிரிவின் கீழ் இருக்கும் Fill Form 6 என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  10. அதில் படிவம் 6-ல் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு எண், ஆதார், பிறந்த தேதி, உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.
  11. பிறகு வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  12. பிறகு நீங்கள் பதிவிட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதனை சோதனை செய்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் Vs மூத்த குடிமக்கள் எஃப்டி.. இரண்டில் எது சிறந்தது?

மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி மிக எளிதாக ஆன்லைன் மூலமே நீங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow Us
மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல் - பரபரப்பு தகவல்
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!