நெருங்கும் அட்சய திருதியை – நகைக் கடைகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரங்கள்

Akshaya Tritiya Alert ச அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும்போது நம் வீட்டில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. இதனால் அன்றைய தினம் மக்கள் விலையை பற்றி கவலைப்படாமல் தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

நெருங்கும் அட்சய திருதியை - நகைக் கடைகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரங்கள்

மாதிரி புகைப்படம்

Published: 

10 Apr 2026 15:19 PM

 IST

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும்போது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே காலம்காலமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அன்றைய நாளில் தங்கம் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்தை பயன்படுத்தி சில நகைகக்கடைகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. தங்கம் வாங்கும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம் . அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும்போது, லட்சுமியின் அருளாள் நம்மிடம் உள்ள செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்து வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கும்போது ஒரு சடங்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்கம் வாங்க மக்கள் நகைக் கடைகளுக்கு அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நடைக்கடைகள் தங்கத்தின் விலை, தரம், ஹால்மார்க்  செய்கூலி போன்ற விஷயங்களில் மக்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிக்க : தங்க நகையை அடகு வைக்கப்போறீங்களா? வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் மறைக்கும் விஷயங்கள்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தங்கம் வாங்கும் முன் முதலில் உங்கள் நகரத்தின் அன்றைய தங்கம் விலை எவ்வளவு என்பதை தெரிந்து வைத்திருப்பதது அவசியம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறும் என்பதால்,  நகைக் கடைக்கு செல்லும் முன் உங்கள் நகரத்தின் அன்றைய நாளில் உள்ள தங்கத்தின் விலை எவ்வளவு என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக  ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் என்றால் அதன் ஒரு கிராம் விலையை கணக்கிடலாம். மேலும் 22 காரட், 18 காரட் போன்ற தரத்திற்கு ஏற்ப விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் ஹால்மார்க். பிஐஎஸ் ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் குறியீடு.

ஒவ்வொரு ஹால்மார்க் நகையிலும் ஹெச்யூஐடி (HUID) எனப்படும் தனித்துவ அடையாள எண் இருக்கும். இந்த 6 இலக்க எழுத்து மற்றும் எண்கள் கலந்த குறியீடு இருக்கும். இந்த எண்ணை பிஐஎஸ் கேர் (BIS Care) செயலி மூலம் சரிபார்த்து நகையின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்க : நிலையற்ற நிலையில் தங்கம்.. இப்போது முதலீடு செய்வது சரியானதா?.. முதலீட்டாளர்கள் கூறுவது என்ன?

தங்கத்தின் காரட் அளவு

  • 24 காரட் தங்கம் 99.94 சதவிகித தூய்மையானது என அர்த்தம்.
  • 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவிகிதம் தூய்மையானதாக இருக்கும்.
  • 18 காரட் மற்றும் 14 காரட் தங்கம் என்பது குறைந்த தூய்மை கொண்டதாக இருக்கும்.

சிலர் 22 காரட் நகையை 24 காரட் விலைக்கு விற்க முயற்சிக்கலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படலாம். பலரு்கு நகையை விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோ தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வரும்.

செய்கூலி

மேலும் தங்கம் வாங்கும்போது செய்கூலி கட்டணம் பற்றி தெளிவாக கேட்க வேண்டும். செல்கூலி என்பது நகை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு செலவாகும். இது நகையின் டிசைன் மற்றும் வேலைபாடுகளுக்கு ஏற்ப மாறுபடும்.  சில நகைக்கடைகள் அதிக செய்கூலி வசூலிக்கலாம்.

மேலும் தங்க நகையின் விலையில், அன்றைய நாளில் தங்கத்தின் விலை, நகையின் எடைை, செய்கூலி, 3 சதவிகித ஜிஎஸ்டி இவை அனைத்தும் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும் நகையில் வைரம் போன்ற கற்கள்  சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றுக்கும் சான்றிதழ் கேட்க வேண்டும். சில நேரங்களில் வைரத்தின் விலை அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.

மிக முக்கியமாக தங்கம் வாங்கிய பிறகு சரியான பில்லை கேட்டு பெற வேண்டும். கையால் எழுதப்படும் பில்லை வாங்குவதை தவிர்க்க வேண்டும். சரியான பில்லில் தங்கத்தின் எடை, காரட், ஹால்மார்க் எண், செய்கூலி, ஜிஎஸ்டி போன்ற அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?