மாறிவரும் விலை – அட்சய திருதியைக்கு தங்கத்தை முன்பதிவு செய்வது நல்லதா?

Akshaya Tritiya Gold Buying: அட்சிய திருதியைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்கம் வாங்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருப்பதால் சில நகைக்கடைகள் முன்பதிவு என்ற முறையை அறிமுகப்படுத்தி வருகின்றன.

மாறிவரும் விலை - அட்சய திருதியைக்கு தங்கத்தை முன்பதிவு செய்வது நல்லதா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Apr 2026 18:43 PM

 IST

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வாங்கும்போது நம் வீடுகளில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. இதனால் மக்கள் அன்றைய நாளில் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  ஆனால் 2026 அன்று தங்கத்தின் விலை வரலாறு காரணாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு தங்கம் வாங்க நினைப்பவர்கள் மிக கவனமாக இருப்பது அவசியம்.

சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடேயே போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக காாணப்படுகின்றனர். அந்த வகையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.52 லட்சத்துக்கு அருகிலும், 22 காரட் தங்கம் ரூ.1.39 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 2.41 லட்சம் வரை சென்றுள்ளது.

இதையும் படிக்க : தமிழ் புத்தாண்டில் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவு உயர்வா?.. இன்றைய நிலவரம்!!

அட்சய திருதியைக்கு தங்கத்துக்கு முன்பதிவு செய்வது நல்லதா?

இந்த நிலையில் அட்சய திருதியைக்கு முன்பே தங்கம் மற்றும் வெள்ளியை முன்பதிவு செய்வது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. முன்பதிவு செய்வதன் மூலம் இன்றயை விலைக்கே தங்கத்தை வாங்கிக்கொள்ள முடியும். இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் விலை உயர்ந்தாலும் அது நம்மை பெரிதாக பாதிக்காது. அதே நேரம் அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்தால், நம் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் நஷ்டமடையவும் வாய்ப்பு இருக்கிறது.

விலை உயர்வை தவிர்க்க அட்சய திருதியை நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்வது நல்ல விஷயம் என்றும். ஆனால் சந்தை மாற்றங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க : தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள்

  1. தங்க நகைக் கடைகள் முன்பதிவு என்ற சலுகைகளை முழுமையாக நம்ப கூடாது. ஒருவேளை அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்தால், அன்றைய விலைக்கே தங்கம் வாங்கிக்கொள்ளலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது.
  2. தங்கத்தின் அடிப்படை விலையை மட்டும் பார்க்காமல் தயாரிப்பு கட்டணம், டிசைனிங், ஜிஎஸ்டி போன்ற அனைத்தையும் சேர்த்து மொத்த விலை குறித்து தெளிவான அறிக்கையை பெற வேண்டும்.
  3. விலை குறைவு என ஏமாறாமல் ஹால்மார்க் கொண்ட நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இது தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் முக்கிய சான்றாகும்.
  4. கடைகள் வழங்கும் முன்பதிவு திட்டங்கள் குறித்த விதிமுறைகளை முழுமையாக படிக்க வேண்டும். சில நேரங்களில் நிறுவனங்கள் முன்பணத்தை திரும்ப வழங்காது.
  5. நகையாக வாங்குவதற்கு பதிலா முதலீட்டு நோக்கில் இடிஎஃப் எனப்படும் பங்கு பரிவர்த்தனை வரத்தக நிதியாக வாங்கலாமா என தெரிந்துகொள்ள வேண்டும்.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி