Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

Aadhaar Services Charges Hikes | ஆதார் கார்டில் சில சேவைகளை பெற வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், ஆதார் சேவைகளை பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.

Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Sep 2025 11:38 AM

 IST

இந்தியாவில் அனைத்து பொதுமக்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இந்த நிலையில், ஆதாரில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள இ சேவை மையங்களை நாட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர உள்ளது. அதாவது, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பெயர், முகவரி மாற்றம், பயோமெட்ரிக் (Biometric) ஆகிய விவரங்களை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் சேவைகளுக்கான கட்டணம் அதிரடி உயர்வு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. காரணம் ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, கைரேகை, கண் ரேகை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அது ஒருவரின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) ஆதார் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் நிலையில்,  அக்டோபர் 1, 2025 முதல் ஆதார் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

ஆதார் சேவை – அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு

  • பெயர், முகவரி மாற்றம் செய்வதற்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.75 ஆக உயர்த்தப்பட உள்ளது.
  • பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது.
  • புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் எதுவுமில்லை.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு சேவைக்காண கட்டணத்திலுமும் ரூ.25 உயர்த்தப்பட உள்ளது.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

2028 வரை அமலில் இருக்கும் கட்டண உயர்வு

ஆதார் சேவைகளுக்கான இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்த கட்டண முறை செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆதார் சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதார் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகபட்சம் உயர்த்துவது பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் என்பதால் மிக குறைந்த அளவே விலை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.