ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவா? நகை பிரியர்கள் ஷாக்
Chennai Gold Price October 11 : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.91,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,425க்கு விற்பனையாகிது. அதே நேரத்தில், வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.187க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை
சென்னை, அக்டோபர் 11 : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.91,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,425க்கு விற்பனையாகிது. அதே நேரத்தில், வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.187க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,87 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், வரி விதிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால், சமானியர்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாங்கனியாக மாறியுள்ளது. இப்படியே சென்றால் தீபாவளி பண்டிகைக்குள் ரூ.1 லட்சத்தை தங்கம் எட்டும் என சொல்லப்படுகிறது. நாள்தோறும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நகை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நகையில் முதலீடு செய்வது தொடர்ந்து இருந்து வருகிறது. காலை, மாலை என தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 2025 அக்டோபர் 11ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. முன்னதாக, 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று காலை தங்கம் விலை ரூ.1,320 குறைந்தது. கிராமுக்கு ரூ.165 குறைந்தது. குறைந்த வேகத்திலேயே மாலையில் தங்கம் விலை உயர்ந்தது.
Also Read : PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை
அதாவது, மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.90,720க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,340க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.184க்கும். கிலோவுக்கு ரூ.1,84 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2025 அக்டோபர் 11ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,425க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Also Read ; தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.187க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியாக சென்றால் தங்கம் விலை 2025ஆம் ஆண்டிற்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடக்கும என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே, தங்கத்தில் மக்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.