Bank Holiday : 2026, ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
16 Days Leave For Banks In January 2026 | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மற்றும் அது தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், வார விடுமுறை, அரசு விடுமுறை மற்றும் பண்டிகைகளின் போது சில நாட்கள் வங்கிகள் செயல்படாமல் இருக்கும். இவ்வாரு ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2026, ஜனவரி மாதம் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை (January 2025 Bank Holidays) அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026, ஜனவரியில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
2026, ஜனவரி மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை மற்றும் அரசு விடுமுறைகள்
ஜனவரி 1, 2026 – புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் மிசோரம், தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேற்கு வங்கம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2, 2026 – புத்தாண்டு கொண்டாட்டம், மன்னர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் கேரளா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3, 2026 – ஹஸ்ரத் அலி பண்டிகை என்பதால் அன்றைய தினம் உத்தர பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12, 2026 – சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14, 2026 – மகர சங்கராந்தி என்பதால் அன்றைய தினம் அசாம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15, 2026 – பொங்கல் பண்டிகை, உத்தராயண புண்ய காலம் உள்ளிட்டவற்றால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16, 2026 – திருவள்ளுவர் தினம் என்பதால் அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17, 2026 – உழவர் திருநாள் என்பதால் அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23, 2026 – நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த நாள், சரஸ்வதி பூஜை, பஞ்சமி உள்ளிட்டவற்றின் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 06, 2026 – குடியரசு தினம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி 2026, ஜனவரி மாதத்தில் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை ஆகியவற்றின் காரணமாக மொத்தம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2025-ல் 100 சதவீதம் லாபம் தந்த சில்வர் ETF.. சிறந்த வெள்ளி இடிஎஃப்கள் எவை?
வழக்கமான விடுமுறைகள்
ஜனவரி 4, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 10, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 24, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 25, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி 2026, ஜனவரி மாதத்தில் வார விடுமுறை காரணமாக மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!
விடுமுறை நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
வங்கியில் மட்டுமே செய்யக்கூடிய தேவைகள் உள்ளவர்கள் வங்கியின் விடுமுறை பட்டியலை பொறுத்து அதற்கு எற்ப திட்டமிட்டுக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இதுதவிர வங்கிகளின் இதர சேவைகளான ஆன்லைன் பேங்கிங் (Online Banking), ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மற்றும் மொபைல் செயலிகள் (Mobile Apps) ஆகியவை வழக்கம் போல இயங்கும். அவற்றின் மூலம் தடையற்ற பண பரிவர்த்தனை சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.