Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்கள் உயர்ந்தால் சமூகமும் உயரும்… டிவி9 நிர்வாக இயக்குநர் பருண் தாஸ் கருத்து

Women Empowerment : நியூஸ்9 குளோபல் மாநாட்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பதிப்பு, ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை அபுதாபியில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டிவி9 நிர்வாக இயக்குநர், பெண்கள் உயர்ந்தால் சமூகம் உயரும் என்று பேசினார்.

பெண்கள் உயர்ந்தால் சமூகமும் உயரும்…  டிவி9 நிர்வாக இயக்குநர் பருண் தாஸ் கருத்து
டிவி9 நிர்வாக இயக்குநர் பருண் தாஸ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Aug 2025 21:23 PM

நியூஸ்9 குளோபல் மாநாட்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பதிப்பு, ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை அபுதாபியில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், பாலிவுட்டின் ஆளுமைகள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டிவி9 நெட்வொர்க் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பருண்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  நிகழ்வில் அவர் SHEconomy Agenda என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வில் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றம், சமூக முன்னேற்றத்துடன் நேரடியாக தொடர்புடையதாக தெரிவித்தார். மேலும் பெண்கள் உயர்ந்தால், நம் ஒட்டுமொத்த சமூகமே உயர்கிறது என்றார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் தலைமைத்துவம் 

பருண் தாஸ் மேலும் பேசியதாவது, அறிவு, சகிப்புத்தன்மை, பரிவு போன்ற பண்புகளே சமூகத்தை முன்னேற்றும் என்று கூறினார். இப்பண்புகள் பெண்களிடம் அதிகம் இருக்கும்போது, பெரும்பாலான தலைமைப்பதவிகளில் ஆண்களே இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் பெண்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. சமத்துவம் தற்போது இந்த சமூகத்திற்கு மிகவும் முக்கியம்.  பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொண்டு வலிமையாக திகழ்ந்துள்ளன. நெருக்கடிகளின்போது சமூகங்களையும் நிறுவனங்களையும் வழிநடத்தும் நிலையான பண்பு பெண்களிடம் இருக்கிறது.

இதையும் படிக்க : ‘பெண்கள் அதிகாரம் உலகளாவிய இயக்கமாக மாற்றப்பட வேண்டும்’.. நியூஸ்9 உலகளாவிய உச்சி மாநாட்டில் டெல்லி முதல்வர் பேச்சு

இந்திரா நூயியின் அனுபவம்

உலகப் புகழ்பெற்ற பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி குறித்த தகவல்களையும் பருண் தாஸ் தனது உரையில் பகிர்ந்துகொண்டார். அவர பேசும்போது, இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் என்ற பதவி கிடைத்ததும் அதனை தன் வீட்டில் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்ள சென்றார். ஆனால் அவரது அம்மா, காலை பால் வரவில்லை. நீ பால் வாங்கி வந்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார். அதற்கு  என் நிறுவனத்தின் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இது கொண்டாடப்பட வேண்டிய நேரம் என இந்திரா நூயி சொல்ல, உன் கிரீடத்தை வெளியே விட்டு வா, வீட்டுக்கு வந்தவுடன் நீ ஒரு மகள், மனைவி, தாய் என்றே நினைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவம் பெண்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், குடும்ப பொறுப்புகளையும், சமூக கடமைகளையும் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.  நியூஸ்9 குளோபல் சம்மிட், வெறும் பங்கேற்பாளர்களாக இருந்த பெண்கள், தற்போது மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக உயர்ந்துள்ளதை கொண்டாடுவதாக பருண் தாஸ் குறிப்பிட்டார். தொழில் துறைகளில் புதுமைகளை கொண்டு வந்து, கிராமப்புற அளவிலிருந்து உலகளாவிய நிறுவனங்கள்வரை மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக பெண்கள் திகழ்கிறார்கள் என்றும் அவர் பாராட்டினார்.