Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அபுதாபியில் நடைபெற்ற நியூஸ்9 குளோபல் சம்மிட் – பெண்களுக்கு முன்னுரிமை!

The News9 Global Summit: நியூஸ் 9 குளோபல் சம்மிட் ஐக்கிய அரபு அமீரக பதிப்பு அபுதாபியில் ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைபெற்றது. இதில் உலகளவில்  பெண் தொழில்முனைவோர்கள், கலைஞர்கள என பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அபுதாபியில் நடைபெற்ற நியூஸ்9 குளோபல் சம்மிட் – பெண்களுக்கு முன்னுரிமை!
நியூஸ் 9 குளோபல் சம்மிட்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Aug 2025 22:37 PM

நியூஸ் 9 குளோபல் சம்மிட் ஐக்கிய அரபு அமீரக பதிப்பு அபுதாபியில் ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைபெற்றது. இதில் உலகளவில்  பெண் தொழில்முனைவோர்கள், கலைஞர்கள என பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் கலந்துகொண்டனர். SHEconomy Agenda எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு பெண்கள் பங்கேற்பாளர்கள் மட்டும் அல்ல, அவர்கள் தலைமை வகிப்பவர்கள் என்பதை எடுத்துக்காட்டியது. ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் கிளப், சும்யா டாட் ஏஐ, ஐபிஎஃப் ஆகியவை இந்த நிகழ்வை இணைந்து நடத்தினர். டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பருண் தாஸ் துவக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பெண்கள் முன்னேற்றமே சமூதாயத்தின் முன்னேற்றத்தின் அடிப்படை என வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து நிகழ்வில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசிய காணொலி ஒளிபரப்பபட்டது. அதில் பேசிய அவர், ஆட்சி மற்றும் சீர்திருத்தங்களில் பெண்களின் தலைமை பங்கும் மிக முக்கியமானவை என குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவை வலுப்படுத்த பெண்களின் பங்கு மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

மாற்றங்களை உருவாக்கும் பெண்களுடன் உரையாடல்

பிரபல நடிகை ரிச்சா சதா தனது சினிமா பயணத்தை பற்றி உரையாடினார். நிகழ்வில் அவருக்கு SHEstar Award for Cinema என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. படாகியும் சமூக செயற்பாட்டாளருமான சோனா மொஹாபத்ரா தனது கலை மற்றும் சமூக பயணம் பற்றியும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் பேசினார். அவருக்கு SHEstar Award fro Music என்ற விருது வழங்கி கொரவிக்கப்பட்டது.

மேலும் பல்வேறு தொழில் முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் சிறப்பு குழு விவாதங்களில் கலந்துகொண்டனர். குறிப்பாக மான் தேஷி ஃபவுண்டேஷன் நிறுவனர் செத்னா காளா சின்ஹா, ஜெட் செட்கோ நிறுவனர் கனிகா டெக்ரிவால்,  ஃபிரண்டியர் மார்கெட்ஸ் நிறுவனர் அஜைதா ஷா, டாக்டர் சோாலி தத்தா ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் எப்படி புதுமையான எண்ணங்கள், உறுதி மற்றும் தொழில்துறைகளை எப்படி மேம்படுத்துகிறார்கள் என கலந்துரையாடினர்.

லேமர் கேபிடல் நிறுவனத்தின் சார்பாக அங்கூர் அட்ரே மற்றும் கெயில் நிறுவனத்தின் சார்பாக ஆயுஷ் குப்தா ஆகியோர் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசினர். மேலும் லாவண்யா நள்ளி, ஷஃபீனா யூசுப் அலி, டாக்டர் சனா சஜான், டாக்டர் ஜீன் ஷாதாத்புரி ஆகியோர் பாரம்பரிய தொழில்களை பெண்கள் தங்கள் யுக்திகளால் வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றுகிறார்கள் என்பதை பற்றி பேசினர்.

பல்துறை சாதனையாளர்கள் கௌரவிப்பு

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். விமானம், நிதி, சமூக பணி, சட்டம், கலைகள் போன்ற துறைகளை சார்ந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். கனிகா டெக்ரிவால், அஜைதா ஷா, ஷஃபீனா யூசுப் அலி, லாவண்யா நள்ளி, செத்னா காளா சின்ஹா, டாக்டர் சனா சஜான். டாக்டர் அல் ஷம்சி, நைலா அல் பாலூஷி, அட்வொகேட் பிந்து செட்டூர், சோனா மொஹாபத்ரா ஆகியோர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.