தனது நோபல் பரிசை டிரம்புக்கு பரிசளித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்!
Corina Machado Presents Her Noble Prize To Donald Trump | 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சோடோவுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் அப்போது அறிவித்ததை போலவே அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வழங்கியுள்ளார்.

நோபல் பரிசை டிரம்புக்கு வழக்கிய மச்சோடோ
வாஷிங்டன், ஜனவரி 17 : வெனிசுலாவின் (Venezuela) எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் தான் கொரினா மச்சோடோ (Corina Machado) . 58 வயதாகும் இவர், இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். காரணம் , இவர் கடந்த 20 ஆண்டுகளாக வெனிசுலாவில் ஜனநாயக உரிமையை மீட்க போராடி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், மச்சோடோவோ தனது நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு (American President Donald Trump) வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில், தற்போது தான் சொன்னதை அவர் செய்துள்ளார்.
தனது நோபல் பரிசை அமெரிக்காவுக்கி வழங்கிய மச்சோடோ
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே அதனை டிரம்புக்கு வழங்க உள்ளதாக அறிவித்த மச்சோடோ, நேற்று (ஜனவரி 16, 2026) அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது தான் வாங்கிய அமைதிக்கான நோபல் பரிசை அவர் டிரம்புக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மச்சோடோ கூறியதாவது, டிரம்பிடம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்குகிறேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்கான அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்.. ரஷ்யா கடும் எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?
மச்சோடோவுக்கு நன்றி – டிரம்ப் எக்ஸ் பதிவு
மச்சோடொவின் செயலுக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மரியா கொரினா மச்சோடோ அற்புதமானவர். பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவர் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை நான் மேற்கொண்ட பணிக்காக எனக்கு வழங்கியுள்ளார். இது பரஸ்பர மரியாதை மீதான அற்புத செயலாகும். மரியாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
டிரம்ப் எக்ஸ் பதிவு
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Jan 15 2026, 7:48 PM ET )It was my Great Honor to meet María Corina Machado, of Venezuela, today. She is a wonderful woman who has been through so much. María presented me with her Nobel Peac… pic.twitter.com/7U7MeWvPy9
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) January 16, 2026
இதையும் படிங்க : பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டியதாகவும், ஆனால் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.