இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..

US President Donald Trump: ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் வாஷிங்டனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..

அதிபர் ட்ரம்ப்

Published: 

11 Sep 2025 09:00 AM

 IST

செப்டம்பர் 11,2025: இந்தியாவிற்கு எதிராக 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளிடம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு முன்பே 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கான அபராதமாக கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 50 சதவீத வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்தியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் வேதனை தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சீனாவில் நடந்த சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை தொடர்பாக ட்ரம்ப், “நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் ஆழ்ந்த இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: ‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?

இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்கா–இந்தியா இடையிலான வர்த்தக தடைகளை நீக்குவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்களும் பங்காளிகளும். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இந்தியா–அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனை திறக்க வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். விவாதங்களை விரைவில் முன்னெடுக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதிபர் ட்ரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தை பெற நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி… நெகிழ்ச்சி பதிவு

100 சதவீதம் வரி விதிக்க வலியுறுத்தல்:

இதனால், இந்தியா–அமெரிக்கா உறவில் ஏற்பட்ட விரிசல் சரியாகும் என நம்பிக்கை எழுந்திருந்த நிலையில், மீண்டும் ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் வாஷிங்டனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் ட்ரம்ப் தொலைபேசியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவிற்கு 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு அவர் ஐரோப்பிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அதிபர் ட்ரம்ப் இதை வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

Related Stories
நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் சுஷிலா கார்கி.. பிரதமர் மோடி மற்றும் இந்தியா குறித்து பேசியது என்ன?
உலக தற்கொலை தடுப்பு தினம்.. தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?
Nepal Protest : நேபாளத்தில் வெடித்த ஜென் Z போராட்டம்.. நிதியமைச்சரை துரத்தி துரத்தி அடித்த போராட்டக்காரர்கள்!
KP Sharma Oli: நேபாளத்தை பந்தாடிய இளைஞர்கள்.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கேபி சர்மா ஒலி!
நேபாளத்தில் வெடித்த போராட்டம்.. துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியானதை தொடர்ந்து சமூக வளைத்தளங்கள் மீதான் தடை நீக்கம்!