டெக்சாஸில் திடீர் வெள்ளம்.. 51 பேர் பலியான நிலையில், 27 மாணவிகள் மாயம்!

51 Died and 27 Missing in Texas Floods | அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கணமழை பெய்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட திடீரெ வெள்ளம் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்தி 27 மாணவிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்.. 51 பேர் பலியான நிலையில், 27 மாணவிகள் மாயம்!

டெக்சாஸ் வெள்ளம்

Published: 

06 Jul 2025 13:28 PM

அமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் (Flood) காரணமாக அங்கு 51 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 27 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. டெக்சாஸில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில், குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இது அங்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெக்சாஸ் வெள்ளம் குறித்த தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெக்சாஸில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 51 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாம ஜூலை 4, 2025 மற்றும் ஜூலை 5, 2025 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டெக்சாஸின் பல்வேறு பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்கள் குறித்த முழுமையான விவரங்களை அரசு இதுவரை வெளியிடாமல் உள்ள நிலையில், சுமார் 51 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களில் 15 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

திடீரெ வெள்ளத்தால் மூழ்கிய பாலங்கள்

வெள்ளத்தில் மாயமான 27 மாணவிகள்

டெக்சாஸுக்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோடைகால முகாமுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகில் சிக்கில் 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். மாணவர்கள் காணாமல் போயுள்ளதால் அவர்கள் மாயமாகிவிட்டனர் என்று அர்த்தமில்லை என்றும், அவர்கள் அந்த பகுதிகளில் எங்கேயும் மரங்களின் மீது ஏறி உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மெலனியாவும் நானும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கிறோம் என கூறியுள்ளார். இதற்கிடையே டெக்சாஸில் மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், மீட்பு படையினர் தொடர்ந்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.