சிரியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயம்!

Syria Mosque Bomb Blast | சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் ஒரு மசூதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 26, 2025) அங்கு நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூதியில் இருந்த 8 இஸ்லாமியர்கள் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயம்!

குண்டு வெடிப்பு நடந்த இடம்

Updated On: 

27 Dec 2025 09:43 AM

 IST

டமாஸ்கஸ், டிசம்பர் 27 : சிரியாவின் (Syria) ஹோம்ஸ் (Homs) நகரில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு தலமான மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 26, 2025) வெள்ளிக்கிழமை என்பதால் அந்த மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த மசூதியில் எதிர்பாராத விதமாக கடும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெள்ளி கிழமை சிறப்பு தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு

அதாவது, வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், அங்கு திடீரென பயங்க குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சரியாக சிறப்பு தொழுகை நடைபெறும் மதிய நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில், மசூதிக்குள் வழிபாடு செய்துக்கொண்டு இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, இந்த குண்டு வெடிப்பின் போது மசூதியில் வழிபாடு செய்துக்கொண்டு இருந்த மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : வங்காளதேசத்தில் மேலும் பதற்றம்.. மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழுகை நடந்துக்கொண்டு இருந்தபோது மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டு 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?