பாகிஸ்தானில் பயங்கரம்.. பேரணியில் குண்டுவெடித்து 14 பேர் பலி.. பலர் காயம்!

Balochistan Bomb Attack : பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். பேரணி நடந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் பலம் காயம் அடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் பயங்கரம்.. பேரணியில் குண்டுவெடித்து 14 பேர் பலி.. பலர் காயம்!

கோப்புப்படம்

Updated On: 

03 Sep 2025 08:03 AM

 IST

பாகிஸ்தான், செப்டம்பர் 03 : பாகிஸ்தானில் பலூசிஸ்தானில் குண்டுவெடிப்பில்  14 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பேரணி ஒன்றில் நடந்த இந்த  குண்டுவெடிப்பில் பொது மக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பலூச் விடுதலை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மாநிலம்  பலூசிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், அப்படியொரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டிய, பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் குவெட்டா ஆகும். குவாட்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு மைதானத்தில் பலூசிஸ்தான் தேசியக் கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் அங்கு கூடியிருந்தனர்.

தேசியவாதத் தலைவரும் முன்னாள் மாகாண முதலமைச்சருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், பலூசிஸ்தான் தேசியக் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் பலூசிஸ்தான் தேசிய உறுப்பினர் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதுல் பிஎன்பி தலைவர் அக்தர் மெங்கலை குறிவைத்ததாக சொல்லப்படுகிறது.

Also Read : ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 ஆக பதிவு..

குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

இருப்பினும், அவர் சிறு காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து பேசிய அக்தர் மெங்கல், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் கட்சி உறுப்பினர்களின் இழப்பால் நான் மனம் உடைந்தேன். சுமார் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்என்றார்பலூசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்ஃப்ராஸ் புக்தி இந்த தாக்குதலைக் கண்டித்து, இது அமைதியின் எதிரிகளின் கோழைத்தனமான செயல் என்று கூறினார். இதுபோன்ற வன்முறைகள் பிராந்தியத்தை சீர்குலைத்து அச்சத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

Also Read : நடுவானில் பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறிய விமான ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பம்!

காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குவெட்டா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையின்படி, தற்கொலைப்படை தாக்குதல் என தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை