ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. 600 பேர் உயிரிழப்பு.. கண்ணீர் வடிக்கும் மக்கள்!

Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் 2025 செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அனைத்து சரிந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுமார் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 600 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. 600 பேர் உயிரிழப்பு.. கண்ணீர் வடிக்கும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

Updated On: 

01 Sep 2025 12:13 PM

ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 01 :  ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள பல கிராமங்கள் நிலநடுக்கத்தால் அழிந்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.  இதனால், அந்த நாடுகளில் சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன.   அதோடு, அந்நாட்டின் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அண்மையில் கூட, மியான்மர், தாய்லாந்தில்  ஏற்பட்ட நிலநடுத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.47 மணியளவில் ஜலதாபாத்தில் 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப அதிர்வைத் தொடர்ந்து 4.7, 4.3, 5.0 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான தொடர்ச்சியாக 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் உள்ள கட்டிடங்கள் அனைத்து சரிந்து விழுந்துள்ளன. குனார் மாகாணத்தில் மூன்று கிராமங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன.

Also Read : தொங்கு பாலம் வெயிட் தாங்குமா? 96 கனரக லாரிகளை ஓட்டி சோதனை.. மாஸ் செய்த சீனா!

600 பேர் உயிரிழப்பு 

நங்கஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகருக்கு அருகிலுள்ள குனார் மாகாணத்தில் பல கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சப்பாதரே மாவட்டங்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

மேலும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. குனார், நங்கர்ஹார் மற்றும் தலைநகர் காபூலில் இருந்து மருத்துவக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு வந்துள்ளன. பல பகுதிகளில் உயிரிழப்பு புள்ளிவிவரங்களை அறிவிக்க முடியவில்லை. மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Also Read : கணவன் மீது விழுந்த 100 கிலோ மனைவி.. மாரடைப்பு ஏற்பட்டு பலியான கணவர்.. சோக சம்பவம்!

இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளன. இதுவரை, மீட்பு அல்லது நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க எந்த வெளிநாட்டு அரசாங்கங்களும் முன்வரவில்லைஎனக் கூறினார்அக்டோபர் 7, 2023 அன்று ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 4,000 பேர் உயிரிழந்தததாக தலிபான் அரசு தெரிவித்து இருந்தது. சமீபத்திய வரலாற்றில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.