ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள சீனா சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு..
PM Modi Visit To China: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா சென்றடைந்தார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மேலும் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

சீனா சென்ற பிரதமர் மோடி
பிரதமர் மோடி சீனா பயணம், ஆகஸ்ட் 30, 2025: பிறந்தநாள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30 2025 தேதியான இன்று சீனா சென்றடைந்தார்அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஜப்பானில் இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை பல்வேறு தொழில்களில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் சீனா பயணம்:
மேலும், உற்பத்தி, இயக்கம், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, புதுமை, தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களில் வலுவான ஒத்துழைப்புகளை உருவாக்க ஜப்பானிய ஆளுநர்களையும் இந்திய மாநில அரசுகளையும் பிரதமர் வலியுறுத்தினார். சீனாவிற்கு இரண்டு நாள் பயணத்தின் போது, பிரதமர் மோடி 2025, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.
மேலும் படிக்க: ‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
அதிபர் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இந்தியா – அமெரிக்க உறவுகளில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், 10 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்திய – சீன உறவுகளின் பார்வையில் குறிப்பிடத்தக்கதாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது .
7 ஆண்டுகள் கழித்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி:
பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீனாவில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய சமூகத்தினிர் தரப்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், இந்தியர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் படிக்க: பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஜப்பானின் கலாச்சார பொம்மை.. தருமா பொம்மைக்கும் இந்தியவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன?
உலக தலைவர்களின் சந்திப்பை எதிர்நோக்குகிறேன் – பிரதமர் மோடி:
抵达中国天津,期待在上海合作组织峰会期间展开深入讨论,并与各国领导人会晤。 pic.twitter.com/vs59dukMND
— Narendra Modi (@narendramodi) August 30, 2025
இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். SCO உச்சிமாநாட்டில் கலந்துரையாடல்களையும் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பதையும் எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.